சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: பாலியல் புகார் தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண் போலீஸ் எஸ்.பி. பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு கார் சாவி பிடுங்கப்பட்டதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Woman SP stopped by police, says Udayanidhi Stalin

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸின் பாலியல் அத்துமீறல் முயற்சி பற்றி உள்துறை செயலரிடம் புகாரளிப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை வந்த போது, அவரை செங்கல்பட்டில் வழிமறித்து கார் சாவியை பிடுங்கி வைத்த மாவட்ட எஸ்.பி. கண்ணனின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை காப்பாற்ற புகார்தாரரான எஸ்.பி.யையே மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது.அன்று பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே புகாரளித்துவிடக்கூடாது என்ற நோக்கில் முதலில் புகார் செய்த பெண்ணின் பெயரை காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் வெளியேசொன்னார்.

விடாமல் இன்னொரு எஸ்.பி.யே தடுக்கிறார். இந்த சம்பவங்கள் மூலம் அடிமைகளின் ஆட்சியில் சாதாரண பெண்கள் முதல் அதிகாரிகளாக பொறுப்பிலிருப்பவர்கள் வரை பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

கிட்டத்தட்ட குற்றத்துக்கு உடந்தையாக செயல்படுவது போல ராஜேஸ் தாஸை காப்பாற்ற முயன்ற செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், பாலியல் குற்றவாளிகளுக்கு மட்டுமன்றி அவர்களை காப்பாற்ற முனைவோருக்கும் தக்க பாடம் புகட்டுவதாக அமையும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

English summary
The woman SP who came to lodge a complaint regarding the sexual harassment was stopped by the police S.P., says DMK Youth Secretary Udayanidhi Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X