சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ஏபிவிபி தலைவர் சுப்பையா - போலீசில் கொடுத்த புகார் வாபஸ்

கார் பார்க்கிங் சர்ச்சையில் பக்கத்து வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து முக கவசங்களை போட்ட டாக்டர் சுப்பையா சண்முகம் மீதான புகாரை திரும்ப பெறப்பட்டுள்ளது. டாக்டர் சுப்பையா மன்னிப்பு கேட்டதால் புகார் வாப

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக உள்ள டாக்டர் சுப்பையா சண்முகம் பக்கத்து வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனாது. இது குறித்து சந்திரா சம்பத் என்பவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தான் நடந்து கொண்டது தவறுதான் என்று கூறி மன்னிப்பு கேட்டதால் சுப்பையா மீதான புகாரை வாபஸ் பெற்றுள்ளார் சந்திரா சம்பத்.

Recommended Video

    பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த டாக்டர் விவகாரம் என்ன ஆனது ? | Oneindia Tamil

    சென்னை நங்கநல்லூர், ராம்நகர் 3வது மெயின்ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 210வது பிளாட்டில் வசித்து வருகிறார் சந்திரா சம்பத், அதே குடியிருப்பில் 110 வது பிளாட்டில் வசித்து வருகிறார் சுப்பையா சண்முகம். இருவருக்குமே கார் பார்க்கிங் தொடர்பாக விவகாரம் ஏற்பட்டது.

    இதனால் தொடர் தொல்லைகளை கொடுத்திருக்கிறார் சுப்பையா சண்முகம். சந்திரா தினசரியும் தனது வீட்டு வாசலில் ஈரத்தை உணர்ந்திருக்கிறார். செய்தி பேப்பர்கள் எல்லாம் ஈரமாகவே இருந்திருக்கிறது. பயன்படுத்தப்பட்ட மாஸ்க் குப்பைகளும் கிடந்திருக்கிறது பொறுத்துப்பார்த்த சந்திரா, யார் இந்த வேலையை செய்வது என்று பார்க்க சிசிடிவி கேமராவை பொருத்தினார். வசமாக சிக்கினார் அசிங்க வேலையை செய்த அந்த நபர்.

    காங். கட்சியினர் வீடுகளில் நாளை கறுப்புக் கொடி... விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு -கே.எஸ்.அழகிரிகாங். கட்சியினர் வீடுகளில் நாளை கறுப்புக் கொடி... விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு -கே.எஸ்.அழகிரி

    சிறுநீர் கழித்த சுப்பையா

    சிறுநீர் கழித்த சுப்பையா

    வீட்டு வாசலில் அசிங்க வேலையை செய்த நபர் வேறு யாருமல்ல சந்திராவிடம் தகராறு செய்த டாக்டர் சுப்பையா சண்முகம்தான் என்று தெரியவந்தது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறைத் தலைவராகவும் பணியாற்றி வரும் மருத்துவர் சுப்பையாவா? இந்த வேலையை செய்திருப்பது என்று அதிர்ச்சியடைந்த சந்திரா, போலீசில் புகார் அளித்தார்.

    சுப்பையா மீது புகார்

    சுப்பையா மீது புகார்

    சந்திரா சார்பாக அவரது அக்காள் மகன் பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் போலிஸாரிடம் அளித்த புகார் மனுவில், அடுக்குமாடி குடியிருப்பில் எனது சித்தி வசித்து வருகிறார். இதே குடியிருப்பில் பிரபல மருத்துவர் சுப்பையா வசித்து வருகிறார். இவர் எனது சித்தியிடம் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்த இடம் கேட்டுள்ள்ளார். இதற்கு மாத வாடகை கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து எனது சித்தி வீட்டின் வாசலில் மருத்துவக் கழிவு குப்பைகளை கொட்டியும் ஒரு நாள் இரவு சிறுநீர் கழித்தும் டாக்டர் சுப்பையா தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் நடவடிக்கை எடுத்தது போல தெரியவில்லை.

    சுப்பையா மீது பாய்ந்த வழக்கு

    சுப்பையா மீது பாய்ந்த வழக்கு

    பல நாட்களாக ஆதம்பாக்கம் காவல்துறையினர் மருத்துவர் சுப்பையாவை விசாரணைக்கு அழைத்தும் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் சுப்பையா மீது ஆதம்பாக்கம் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இது சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையானது. எதிர்க்கட்சியினர் சுப்பையாவை வறுத்து எடுத்தனர்.

    புகரை திரும்ப பெற்ற சந்திரா

    புகரை திரும்ப பெற்ற சந்திரா

    இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆன நிலையில் திடீரென நேற்றிரவு சுப்பையா மீது கொடுத்த புகார் அந்த சந்திரா திரும்ப பெற்றிருக்கிறார். காவல்நிலையில் இருவரும் பரஸ்பரம் எழுதிக்கொடுத்து கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அதில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஏற்பட்ட சண்டையை ஏரியாவில் வசிக்கும் நண்பர்கள், குடியிருப்புவாசிகளுக்குள் பேசி தீர்த்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். இருவரும் பரஸ்பரம் பேசி பிரச்சினையை முடித்துக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புகாரை வாபஸ் பெற அழுத்தம்

    புகாரை வாபஸ் பெற அழுத்தம்

    டாக்டருக்கு படித்து விட்டு பொறுப்பான வேலையில் இருக்கும் சுப்பையாவின் செயல் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு ஆளானது. அதோடு அக்கம்பக்கத்தினரும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களும் சுப்பையா மீதான புகாரை வாபஸ் பெறச்சொல்லி சந்திராவிற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிகிறது. எது எப்படியோ பக்கத்து வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த டாக்டர் சுப்பையாவின் தகாத செயல் இப்போது நாடு முழுவதும் தெரியவந்து விட்டது. புகார் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிவிட்டார் சுப்பையா. ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராகவும் உள்ள சுப்பையாவின் பதவி தப்புமா?

    English summary
    The Woman has withdrawn her complaint against ABVP National President Dr Subbaiah Shanmugam over harassment
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X