சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்டி போடு.. திமுகவில் திடீர் மாற்றமா.. மொத்தம் 20 பேர்.. கூடும் மவுசு.. பின்னணியில் கனிமொழியா?

திமுகவில் பெண் மாவட்ட செயலாளர்களை நியமிக்க யோசனை நடந்து வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுக்குள் ஒரு புதுவித அதிரடி மாற்றம் நிகழ போவதாகவும், அதற்கு பின்னணியில் கனிமொழி எம்பி இருப்பதாகவும் ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது..!
மாவட்ட செயலாளர் பதவி என்பது கிட்டத்தட்ட அமைச்சர் பதவி போலத்தான்.. தங்கள் மாவட்டத்தின் மொத்த பொறுப்புக்கும் ஜீவநாடியே மா.செ.க்கள்தான்..

மாவட்ட செயலாளர்கள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை அனுசரித்து வழிநடத்தி செல்லக்கூடிய பண்பும், மக்கள் செல்வாக்கு உள்ள தலைமைப் பண்பும் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்..

அதிமுக அரசு தான் கண்டுகொள்ளவில்லை.. செந்தில்பாலாஜி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் -கனிமொழி MP..! அதிமுக அரசு தான் கண்டுகொள்ளவில்லை.. செந்தில்பாலாஜி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் -கனிமொழி MP..!

 முக்கிய பொறுப்பு

முக்கிய பொறுப்பு

அதே நேரத்தில் தேர்தல் மற்றும் போராட்டங்களை சந்திக்க கூடிய அளவிற்கு வலிமைமிக்கவராகவும் இருந்தால் மட்டுமே கட்சியின் பலம் அந்த மாவட்டத்தில் எடுபடும். அந்த வகையில், புதிய மாறுதல் ஒன்றை திமுக தரப்பில் செய்ய முடிவெடுத்துள்ளனராம்.. அதன்படி, காலியாக உள்ள மா.செ. பதவிகளில் பெண்களை நியமிக்கவும் ஆலோசனைகள் தரப்பட்டு வருகின்றனராம்..

தமிழ்நாடு

தமிழ்நாடு

இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதுமே, அறிவித்த முக்கியமான திட்டம், நகர பேருந்துகளில் மகளிர் இலவச பயண அறிவிப்பாகும்.. இந்த அறிவிப்பானது, தமிழ்நாட்டில் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்து வருகிறதாம்.. இதனால் பெண்களின் ஓட்டு வங்கியை கவரும் வகையில் இதுபோன்ற திட்டங்களை கையில் எடுக்க திமுக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது..

 ஜெயலலிதா

ஜெயலலிதா

காலங்காலமாகவே பெண்கள் ஓட்டு என்றால் அது எம்ஜிஆருக்கு விழும், அல்லது ஜெயலலிதாவுக்கு விழும்.. பெரும்பான்மையான பெண்களின் வாக்கு சதவீதத்தைஅதிமுகவே பெற்று வரும் நிலையில், இதை திசை திருப்பவே, திமுக முயன்ற வருவதாக தெரிகிறது.. அத்துடன் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளையும் திட்டமிட்டு வருகிறதாம்.

 மா.செ.க்கள்

மா.செ.க்கள்

தற்போது இலவச பஸ் பயண அறிவிப்பில், ஓரளவு ஆதரவு கிடைத்துள்ளதை அடுத்து, திமுகவின் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பிலும் சில பெண்களை நியமிக்க தலைமைக்கு ஆலோசனை கூறப்பட்டு வருகிறதாம்.. ஆண்கள் மட்டுமே கோலோச்சி வரும் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு பெண்களை நியமிக்கலாம் என்று கடந்த 5 வருடத்துக்கு முன்பே கருணாநிதி நினைத்தார்..

 கனிமொழி

கனிமொழி

இப்போது அது ஸ்டாலின் ஆட்சியில் தீவிரமாகும் என்று தெரிகிறது.. மாவட்ட ரீதியாக பெண்களை பொறுப்புகளில் நியமனம் செய்யும் நியமனத்தில் கனிமொழிக்கும் முக்கியமான ரோல் இருக்கிறது என்கிறார்கள்.. திமுக மகளிர் அணியை கனிமொழி இப்போது வரை திறம்பட செய்து வருகிறார்..

 மகளிர் அணி

மகளிர் அணி

நாட்கள் ஆக ஆக, மகளிர் அணி வலிமை பெற்றும் வருகிறது.. கனிமொழியின் அணுகுமுறை, அதிரடிகள், போன்றவைகளால், தென்மண்டல திமுகவின் மதிப்பும் கூடி கொண்டே வருகிறது.. இனி மா.செ. போன்ற முக்கிய பொறுப்புகளில் பெண்களை நியமிப்பதன்மூலம், திமுகவுக்கான மவுசு மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்களின் மதிப்பும் எகிறும் என்றும் நம்பப்படுகிறது.

 அதிருப்தி

அதிருப்தி

ஏற்கனவே, சில மா.செ.க்கள் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.. மேலும், திமுகவை நம்பி வரும் மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை வழங்கவும் முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டு வரும் நிலையில், மா.செ.க்களியே புது அதிரடி என்பது பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் கூட்டி வருகிறது.. இப்போதைக்கு காலியாக உள்ள 20 பதவிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய பெண்களை நியமிக்க, திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.. பார்ப்போம்.!

English summary
Women may appointed in DMK district secretary posts soon, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X