சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடன் தொகையை கேட்டு கழுத்தைப் பிடிக்கும் வங்கிகள்.. கடும் நெருக்கடியில் மகளிர் சுய உதவி குழுக்கள்..!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக வருவாய் இழந்து தவித்து வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையை கேட்டு வங்கிகள் நெருக்கடிகள் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

தனியார்துறை வங்கி ஒன்றின் அழுத்தம் காரணமாக மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர் திருச்சியில் நேற்று பரிதாபமாக உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்நிலையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு நாசப்படுத்தி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.

போயஸ் கார்டனில் கண்காணிப்பு அதிகரிப்பு... சொந்தப் பணத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் ரஜினி..!போயஸ் கார்டனில் கண்காணிப்பு அதிகரிப்பு... சொந்தப் பணத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் ரஜினி..!

சுய உதவிக் குழு

சுய உதவிக் குழு

பெண்கள் பொருளாதார விவகாரத்தில் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது என்பதற்காகவும் தனி நபர் வருமானத்திற்கு வழிவகை செய்ய வேண்டியும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. குழு ஒன்றில் 12 முதல் 20 நபர்கள் வரை உறுப்பினர்களாக இணைவார்கள். அவர்களுக்குள் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

வங்கியில் கடன் கோருவது, தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் காட்டுவது உள்ளிட்ட பொறுப்புகளை தலைவராக இருப்பவர் கவனித்துக் கொள்வார். கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி என மகளிர் சுய உதவி குழுவினர் கணக்குகளை தொடங்கி கடன் பெற்று சிறுதொழில் நடத்துவர்.

ரத்து செய்க

ரத்து செய்க

ஊறுகாய் தயாரிப்பது, சாலையோர உணவகம் நடத்துவது, தையல் கடை அமைப்பது, என அவரவர் திறமைக்கேற்ப மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் தொழில் புரிவார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் சுமார் 6 மாதங்களாக வருவாய் இழந்து தவித்து வரும் மகளிர் சுய குழுவினர் பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 கனிமொழி கடிதம்

கனிமொழி கடிதம்

ஆனால், அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதனிடையே கடந்த வாரம் சேலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் கலந்துரையாடிய கனிமொழி, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடனை தள்ளுபடி செய்யுமாறு மத்திய நிதி அமைச்சருக்கு தாம் கடிதம் எழுதியதாகவும் கடிதம் கிடைத்தது என்று தான் பதில் வந்ததே தவிர அந்தக் கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினார்.

நிதிச் சிக்கல்

நிதிச் சிக்கல்

இந்தச் சூழலில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிவருவதால், மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கொடுத்த கடனை கேட்டு வங்கிகள் நச்சரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் மகளிர் சுய உதவி குழுக்கள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

English summary
Women's self-help groups in crisis
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X