சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“மேஜிக் நம்பர்”.. தமிழ்நாடு அரசின் செம திட்டம்! பெண்கள் “டபுள் ஹேப்பி” - ரூ.888 ரூபாய் சேமிப்பாம்

Google Oneindia Tamil News

சென்னை: மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்தால் பெண்கள் ஒரு மாதத்திற்கு ரூ.888 வரை சேமிப்பதாக தமிழ்நாடு திட்டக்குழு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், அதே நாளிலேயே 5 திட்டங்களுக்கான கையெழுத்தை போட்டார்.

அதில், முதன்மையானது அரசு நகர பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்ற திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. கையெழுத்துபோட்ட மறுநாளான மே 8 ஆம் தேதியே இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.

திருவாரூரோ திருவள்ளூரோ.. உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்.. சவுக்கு சங்கர் அதிரடிதிருவாரூரோ திருவள்ளூரோ.. உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்.. சவுக்கு சங்கர் அதிரடி

கட்டணமில்லா பேருந்துகள்

கட்டணமில்லா பேருந்துகள்

நகர பகுதிகளில் வெள்ளை போர்டு வைக்கப்பட்ட பேருந்துகளிலும், கிராம பகுதிகளில் இயக்கப்படும் நகர பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு கட்டணமில்லா டிக்கெட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. கட்டணமில்லா பேருந்துகளை அடையாளம் காண நகர பகுதிகளில் உள்ள பேருந்துகள் பிங்க் நிறமாக மாற்றப்பட்டு உள்ளன.

177 கோடி பயணம்

177 கோடி பயணம்

இதன் மூலம் தினசரி வேலைக்கு சென்று வரும் அலுவலக பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சிறு குறு வியாபாரிகள், நடை பாதை வியாபாரிகள் என பல்வேறு தரப்பை சேர்ந்த பெண்கள் பயனடைந்து வந்தனர். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வரை பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தின்படி 176.84 பயணங்கள் நடைபெற்று உள்ளது.

திட்டக்குழு அறிக்கை

திட்டக்குழு அறிக்கை

தினசரி 39.21 லட்சம் கட்டணமில்லா பயணங்கள் இத்திட்டத்தின் மூலம் சராசரியாக நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் பயணை உணர்த்தும் வகையில் புதிய ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.

ரூ.888 சேமிப்பு

ரூ.888 சேமிப்பு

இது குறித்து தமிழ்நாடு மாநில திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வில், தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கட்டணமில்லா கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள், மாதம் ஒன்றுக்கு ரூ.888 சேமிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இத்திட்டத்தால் தமிழ்நாடு பெண்கள் அடைந்து இருக்கும் பெரும் பயணை காட்டி இருக்கிறது.

3 மாவட்டங்கள்

3 மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று இந்த ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பகுதிகள் மற்றும் தொழில்கள் அதிகம் இருக்கும் மதுரை, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அதிகம் உள்ள நாகப்பட்டினம், தொழிற்சாலைகளை அதிகம் கொண்ட 3 மாவட்டங்களில் இந்த ஆய்வு எடுக்கப்பட்டு இருக்கிறது.

1200 பேரிடம் ஆய்வு

1200 பேரிடம் ஆய்வு

கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நேரடியாக மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 437 பேரிடமும், மதுரையில் 422 பேரிடமும், நாகப்பட்டினத்தில் 416 பேரிடமும் என மொத்த 1,200 பேரிடம் திட்டக்குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்து இருக்கிறது.

சேமிக்கும் பெண்கள்

சேமிக்கும் பெண்கள்

கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் வாயிலாக மிச்சமாகும் ரூ.888-ஐ வேறு அவசிய தேவைகளுக்கும், சேமிப்புக்கும் பயன்படுத்துவதாக பெண்கள் தெரிவித்து உள்ளார். அதேபோல், பேருந்தில் பயணம் செய்வது வீட்டில் உள்ளவர்களின் தயவை எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என அவர்கள் தெரிவித்து இருக்கின்றன.

English summary
According to Tamil Nadu Planning Commission research results, women save up to Rs.888 per month due to the Tamil Nadu government's scheme of free bus travel for girls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X