சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

WFH அலப்பறைகள்... திடீர்னு சொன்னா.. கக்கூஸ் கதவை மூடு.. லேப்டாப்பை அங்க வைக்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: டேய் கொரோனா.. உன்னால வந்த சிக்கல்களைப் பாருடா.. முடியலடா.. இப்படித்தான் பலரும் கதறிக் கொண்டுள்ளனர்.

Recommended Video

    Corona Virus : பரவும் கொரோனா..அச்சத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள்..

    கொரோனாவால் உடம்புக்கு மட்டும் பிரச்சினை வரலைங்க.. ஊர் முழுக்க வேலை பார்ப்போருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள். பல நாடுகளில் யாரும் ஆபீஸுக்கு வராதீங்க.. வீட்ல இருந்தே வேலை பாருங்க என்று கூறி விட்டனர். இதனால் உலகம் முழுவதும் பலரும் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

    ஹய்யா இது ஜாலியாச்சே.. வீட்ல இருந்தபடியே வேலையா என்று பலரும் நினைக்கிறார்கள்.. தப்பு செஞ்சுட்டீங்கப்பா... தப்பு செஞ்சுட்டீங்க.. அப்படியெல்லாம் நினைக்காதீங்க.. அதுல எம்புட்டு கஷ்டம் இருக்கு தெரியுமா.. அனுபவிச்சாதான் தெரியும்ய்யா அதெல்லாம்!

    முதல்ல இடம் பார்க்கணும்

    முதல்ல இடம் பார்க்கணும்

    முதல்ல வீட்டுல நமக்கு தோதா உட்கார்ந்து வேலை பார்க்க ஒரு இடம் தேவை. அதுதான் முதல் கஷ்டமே.. காரணம் நமக்கு பொருத்தமான இடம் என்பது பெரும்பாலும் நமக்குக் கிடைக்கவே கிடைக்காது.. எனவே இருக்கிற இடத்தில் ஒரு இடத்தை தேடிப் பிடித்து அங்கு போய் துண்டைப் போட்டு உட்கார வேண்டியதுதான். உட்கார்ந்த பிறகு அதை நமக்கேற்ற மாதிரி மாத்திக்க வேண்டியதுதான். சின்ன இடமாக இருந்தாலும் முடக்கிக் கொண்டு உட்கார்ந்துக்க வேண்டியதுதான்.

     உப்பலா தலையணை தேவை பாஸ்!

    உப்பலா தலையணை தேவை பாஸ்!

    இடத்தைக் கண்டுபிடிச்சதும் அடுத்து சேர் தேவை.. அது ரொம்ப கஷ்டமானது. வீடாச்சே.. ஹை சொபிஸ்டிகேடட் ரோலிங் குஷன் சேரெல்லாம் கிடைக்காது.. இருக்காது.. இருந்தாலும் திடீர்னு கேட்டா வீட்டில் இருக்கும் பக்கிக அதை உங்களுக்கு உடனே கொடுக்காதுங்க. அப்படி இப்படி சண்டை போட்டு ஏதோ செட்டப் செஞ்சாச்சுன்னு வைங்க.. அடுத்து இந்த கம்ப்யூட்டரை தூக்கி கரெக்டான டேபிளில் வைக்கணும். அதுக்கு முதல்ல நாம தேட வேண்டியது.. நல்லா கும்முன்னு உப்பலா இருக்கிற.. நாலஞ்சு தலையணைகள்!

    ஓகே.. டேபிள் ரெடி!

    ஓகே.. டேபிள் ரெடி!

    இப்ப நமக்குக் கிடைச்சிருக்கிற டேபிளில் ( சில நேரம் டீப்பாய் கூட சொர்க்கம்ணே.. நல்ல உயரமா இருக்கிற செவப்புக் கலர் வாளி கிடைச்சா கூட ஓகேதான்) கம்ப்யூட்டரை வச்சுட்டு உட்கார்ந்தா பல நேரங்களில் அது கீழே இருக்கும்.. நாம மேலே இருப்போம்.. அப்படியாப்பட்ட கஷ்ட காலத்தில் நமக்குக் கை கொடுப்பதுதான் இந்த தலையணைகள் மற்றும் படிக்க வாங்கி படிக்காமலேயே தூக்கிப் போட்டு தூசி அடைந்த புத்தகங்கள்.. முதல்ல 2 தலையணை.. பிறகு 4 புக் என்று கரெக்டாக செங்கல் வச்சு கட்டடம் கட்டுவது போல பேலன்ஸ் செய்து அதில் நம்மோட லேப்டாப்பை (ஆடாம அசையாம) தூக்கி வச்சுட்டோம்னா.. சூப்பர்.. வேலை பார்க்க கம்ப்யூட்டர் ரெடி.!

    இப்படியும் சிக்கல் வரும்

    இப்படியும் சிக்கல் வரும்

    பல பேர் என்ன பண்ணுவாங்க தரையில் உட்கார்ந்தமேனிக்கு.. மடியில் லேப்டாப்பை வச்சு ரொம்ப நேரம் தட்டிப் பார்ப்பாங்க.. விளைவு முதுகு பிடிப்பு.. மூச்சுப் பிடிப்பு மற்றும் முட்டிக் கால் தேய்தல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழக் கூடும். அவர்களுக்காகவே டேபிள் மேட் வந்திருக்கு.. அதை வாங்கி வச்சு பயனடையலாம்.. அதுவும் கூட ரொம்ப நேரம் குந்த வைத்து வேலை பார்க்க முடியாது.. ஸோ.. பெட்டர் நல்ல டேபிள் சேருக்கு போய் விடுவது உசுருக்கு நல்லது.

    ஜன்னல் வழியாக வேடிக்கை

    ஜன்னல் வழியாக வேடிக்கை

    பஸ்சில் ஜன்னலோரம் உட்கார்ந்தபடி பயணித்து பயணித்து பலருக்கும் இந்த ஜன்னல்னாலே ஒரு மையல் இருக்கும்.. அதற்காகவே ஜன்னலோரமாக டேபிளைப் போட்டு உட்கார்ந்து கம்ப்யூட்டரில் மெயில் பார்க்கத் துடிப்பார்கள்.. ஏன் அங்கேயே அமர்ந்து சீரியஸாகவும் வேலை பார்க்க ஆசைப்படுவார்கள்..ஆசையில் தப்பு இல்லை.. ஆனால் திடீரென நாலஞ்சு காக்கா வந்து ஜன்னலோரமாக குவிந்து "கா கா கா" என்று கத்தி விட்டு வேகமாக பறந்து விடும் வாய்ப்புகள் இருப்பதால் அதைக் கேட்டு நீங்க பயந்து போய் விடக் கூடாது.. திட மனதுடன் ஜன்னலைத் தேடி போக வேண்டும். அதேசமயம், பல நேரங்களில் குயில்கள் கூவும் சத்தம் மனசுக்கு அப்படி இதமாக இருக்கும்.. அந்த பேக்கிரவுண்டில் மெயில் பார்ப்பதும்.. வேலை பார்ப்பதும் சுகம்!

    டிரஸ்ஸாவது கோடாவது!

    டிரஸ்ஸாவது கோடாவது!

    இந்த ஒர்க் பிரம் ஹோம் சமாச்சாரத்தில் நமக்கு இருக்கும் ஒரு மாபெரும் சவுகரியம் என்ன தெரியுமா பாஸ்.. "டிரஸ் கோட்"தான்.. அதாவது "கோடே" இல்லாத டிரஸ்தான் இதன் மெயின் சமாச்சாரம்.. ஆண்களாக இருந்தால் "கோடு போட்ட லுங்கி" மட்டும் போதும்.. இன்னும் விசேஷம்.. வீட்டுல நீங்க மட்டும் தனியா இருக்கீங்களா.. ஆளே இல்லையா.. "அது" கூட தேவையில்லைங்க.. (டிராயர் மட்டும் போட்டுக்கிட்டா போதும்னு சொல்ல வந்தோம்.. ரொம்ப டீப்பா யோசிக்காதீங்க)! இது ஒர்க் பிரம் ஹோமில் உள்ள உங்களுக்கான சவுகரியங்களில் ஒன்று.. நீங்க இதை மெயினா தெரிஞ்சு வச்சுக்கணும்!

    கான்பரன்ஸ் காலா .. கூல் கூல்!

    கான்பரன்ஸ் காலா .. கூல் கூல்!

    திடீர்னு ஆபீஸில் வீடியோ கான்பரன்ஸ் கால் வச்சுட்டாங்களா.. கவலையே கிடையாதுங்க.. கொஞ்சம் கூட கவலையே கிடையாது.. பயப்படவேண்டாம். கீழே டிராயர்.. மேல சட்டை.. மூஞ்சியை சோப்பு போட்டு கழுவிட்டு, தலையை லேசா சீவி விட்டு.. லைட்டா பவுடரை எடுத்து அப்படியே மழைச்சாரல் மாதிரி தூவி டச்சப் பண்ணிட்டு கேமரா முன்னாடி உட்காந்தீங்கன்னு வைங்க.. ப்ப்ப்ப்பா.. சூப்பர்! .. ஆனால் இதில் ஒரு "குடும்பச் சிக்கல்" இருக்கு.. அது என்னான்னு உங்களுக்குத் தெரியணும்னா கட்டாயம் நீங்க அடுத்த பாராவுக்குப் போயாகணும்.. வாங்க போலாம்!

    அடேய்களா இது அல்டிமேட்..ரா!

    இதுதாங்க அந்த சிக்கல்.. என்னதான் நீங்க ஆபீஸ் பாரத்தைத் தூக்கிச் சுமந்தாலும்.. வீட்டுப் பாரத்தை தவிர்க்கவே முடியாதுங்க. அதையும் பொறுத்துக்கிட்டுதான் ஆகணும்.. இங்க பாருங்க நம்மாளு ஒருத்தரை.. ரொம்ப சிரத்தையா ஆபீஸ் வேலையில் மும்முரமா இருக்காரு.. கூடவே குடும்பமும் ஓடியாடி கும்மியடிச்சுட்டுப் போகுது.. இதுதாங்க Work From Home மேட்டரில் உள்ள சொர்க்கம்.. சேர் மேல ஏறி உட்கார்ந்தா வேலை.. சேரை விட்டு இறங்கிட்டா வீடு.. வீட்டுல வேலை.. வேலையோட வீடு.. இதை விட வேற என்னங்க வேணும்!

    English summary
    Due to the spread of Coronavirus all over the world, many offices are asking their employees to take WFH option to avoid the impact.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X