சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறைந்த விலையில் ஏழைகளுக்கு வீடுகள்.. 250 மில்லியன் டாலர் மதிப்பில் உலக வங்கி-தமிழக அரசு ஒப்பந்தம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் குறைந்த விலையில் வீடுகளை ஏழைகளுக்கு வழங்கும் திட்டத்தில் தனியார் துறையின் பங்கை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது.

உலக வங்கி, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையே திங்கள்கிழமை இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

World Bank signs $250mn agreements for Tamil Nadu housing

உலக வங்கியின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வழங்கப்படவுள்ள நிதியில், 200 மில்லியன் டாலர்கள் தமிழக வீட்டுவசதி துறை வலுப்படுத்த பயன்படும்.

"குறைந்தவிலையில் வீட்டுவசதி கிடைப்பதை அதிகரிப்பதன் மூலம் படிப்படியாக மாநிலத்தில் அனைவருக்கும் வீடு இலக்கு எட்ட வாய்ப்பு கிடைக்கும்" என்று வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழகம்தான். எனவே, இங்குள்ள நகரங்களில் குறைந்தவிலை வீட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மாற்றப்படும்.

உலக வங்கியின் மூத்த நகர்ப்புற பொருளாதார நிபுணர் யூன்ஹீ கிம் கூறுகையில்: வளர்ந்து வரும் வீட்டுவசதி தேவையை பொதுத் துறையால் மட்டுமே தீர்க்க முடியாது என்பதை உலகளாவிய அனுபவம் காட்டுகிறது, குறிப்பாக நாடுகள் விரைவான நகரமயமாக்கலுக்கு மாறும் நிலையில், அரசால் மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

கண்டைன்மெண்ட் மண்டலத்தில் எந்த மாதிரி விதிமுறைகள் அமல்? முழு விவரம் கண்டைன்மெண்ட் மண்டலத்தில் எந்த மாதிரி விதிமுறைகள் அமல்? முழு விவரம்

தமிழக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி நகர்ப்புறமாக உள்ளது, மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்த சதவீதம் 63 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நகர்ப்புற மக்களில் 16.6 சதவீதம் பேர் குடிசை பகுதிகளில் வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த வீட்டு வசதி திட்டம் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Government of India, Government of Tamil Nadu and World Bank yesterday signed legal agreements to help low-income groups in Tamil Nadu get access to affordable housing: Union Ministry of Finance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X