• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சர்வதேச சிரிப்பு தினம் 2020: டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி- வாய் விட்டு சிரிங்க கொரோனா ஓடிப்போயிரும்

|

சென்னை: சிரிப்பு மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் அற்புதமான உணர்வு. சிரிக்கும் போது நமது முகம் மட்டுமல்ல நமது உடம்பே அழகாகும். டென்சனை குறைங்க அவ்வப்போது சிரிங்க உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். வெள்ளை அணுக்கள் உடம்புல உற்பத்தியாகும் நோய்களோட எதிர்த்து போராடுமாம். நல்லா வாய் விட்டு மட்டுமல்லாமல்ல மனசு விட்டும் சிரிங்க மக்களே கொரோனா வைரஸ் தாக்கினால் கூட சீக்கிரம் குணமாகிடும். சிரிப்போட அவசியத்தை சொல்றதுக்காகவே உலக சிரிப்பு தினத்தை ஞாயிறு முதல் வாரத்தில கொண்டாடுறாங்க. சிரிப்போட அவசியத்தையும் சிரிப்பதனால ஏற்படும் நல்ல விசயங்களை பற்றியும் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த டாக்டர் டாக்டர் மதன் கதாரியா என்பவர்தான் 1998 ஆம் உலக சிரிப்பு தினத்தை உருவாக்கியவர், அவர்தான் உலகம் முழுக்க இயங்கிட்டு இருக்கிற லாப்டர் யோகா இயக்கத்தை தொடங்கியவர். இந்த லாப்டர் யோகா மனிதர்களோட உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் நல்லா ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.

சிரிப்பு ஒரு அற்புதமான மருந்துன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க. நல்லா வாய் விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான். அந்த மனிதன் கிட்ட இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி எல்லாம் பறந்து போயிடும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும். வாய் விட்டு மட்டுமல்லாமல் நல்லா மனசு விட்டும் சிரிக்கும் போது உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பு கரைகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

நல்லா சிரிங்க உடல் ஆரோக்கியம் அதிகமாகும். சிரிக்கும் போது நுரையீரலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அல்சரை வருவதை தடுக்கும் என்சைம்களை சுரக்கச் செய்கிறது. நம்மோட உமிழ் நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகமாகும். உடல் வலிகளை போக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்யும்.

குழந்தை மனதோட இருங்க

குழந்தை மனதோட இருங்க

பிறந்த குழந்தை பசிக்காக அழுதாலும் நிறைய சிரித்துக்கொண்டே இருக்கும் குழந்தைகள் சராசரியாக 300லிருந்து 400 தடவை சிரிப்பதாகவும், அதில் 150 தடவை கலகலப்பாக சத்தம் போட்டு சிரிப்பதாகவும் சொல்கிறார்கள். காலப்போக்கில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், வயதான பின்னர் வேலை, திருமணம் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் சிரிப்பதையே மறக்கடிக்கச் செய்து விடுகிறது.

மனசு விட்டு சிரிங்க

மனசு விட்டு சிரிங்க

எதற்கெடுத்தாலும் டென்சன் ஆவதை குறைங்க அவ்வப்போது சிரிங்க உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். வெள்ளை அணுக்கள் உடம்புல உற்பத்தியாகும் நோய்களோட எதிர்த்து போராடுமாம். தினசரி அரைமணி நேரம் சிரிங்க இதயம் அற்புதமாக இயங்கும் ரத்தக்கொதிப்பு வராது மாரடைப்பு வரவே வராது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரக்காது.

சிரிப்பு எக்சர்சைஸ்

சிரிப்பு எக்சர்சைஸ்

நீங்க தினசரியும் ஒருமணி நேரம் எக்சர்சைஸ் செய்வதை விட 20 நிமிடம் வாய்விட்டு சிரிங்க உங்க உடலும் மனசும் ரொம்ப ஆரோக்கியமாக மாறிடும்னு மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க. என்ன மக்களே உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட உள்ள நாளான நாளையில இருந்தாவது சிரிங்க சந்தோஷமாக இருங்க. கொரோனா கோ அப்படின்னு சொல்லுங்க.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Laughter is the best meditatoin. Laughter is the good for the soul.Laughter yoga and smile is best for hormonal balance. World Laughter Day 2020 celebrates on First Sunday on May month.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more