• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யாகவா முனிவர் vs சிவ சங்கர் பாபா.. ஞாபகம் இருக்கா அந்த சண்டை.. பெண்ணால்தான் சிறைன்னு அப்பவே சொன்னார்

Google Oneindia Tamil News

சென்னை: சிவ சங்கர் பாபா பெண்கள் விஷயத்தால் சிறைக்கு போவார் என்று 23 வருடங்களுக்கு முன்பே, யாகவா முனிவர் கூறியுள்ளார். சன் டிவியில் அவர் கொடுத்த நேர்காணல் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

1949 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் என்ற ஊரில் பிறந்தவர் தான் சிவசங்கர். சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேதியியல் துறையில் இளங்கலை படிப்பு மட்டும் போக்குவரத்து கையாளுதல் பிரிவில் முதுகலை படிப்பு படித்தவர்.

ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்! ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்!

சென்னை மண்ணடியில் லாரி புகிங் ஏஜன்ட் ஆக பணியை ஆரம்பித்தார். 1973 முதல் 1983 வரை ரியல் எஸ்டேட் ஒப்பந்தம், ஆவணப்படத் தயாரிப்பாளர் என பல விஷயங்களில் அடையாளப்படுத்திக் கொண்டார்.

சிவ சங்கர் ஆரூட நிலையம்

சிவ சங்கர் ஆரூட நிலையம்

சென்னை அண்ணாநகர் ரோட்டரி கிளப், ஆந்திரா வர்த்தக சம்மேளன நிர்வாகக்குழு, இந்தியன் வங்கி நிர்வாக குழுவில் சிவசங்கர் இடம்பெற்றார். சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் பதவியையும் பிடித்தார். 1980களில் சென்னை மண்ணடியில் சிறிய அளவில் ஆருடம் சொல்ல ஒரு நிலையத்தை தொடங்கினார் . தன்னை நாடி வருவோர்க்கு, வேலைவாய்ப்பு, திருமணம், உடல் நலம், குழந்தை பேறு உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார். இதனால் ஆன்மீக உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார்.

ஆடிப் பாடுவது வாடிக்கை

ஆடிப் பாடுவது வாடிக்கை

2001ஆம் ஆண்டு கேளம்பாக்கத்தில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் சர்வதேச உறைவிடப் பள்ளி உருவாக்கினார் சிவசங்கர். இவரின் ஆன்மீக இயக்கத்துக்கு நன்கொடைகள் குவிந்தன. இதனால் அவரது செல்வாக்கு விரிவடையத் தொடங்கியதும் தன்னை இறைவனின் அவதாரம் என்று கூறிக்கொண்டார் சிவசங்கர். ஆடி பாடி விளையாடுவதுதான் இறைவனோடு கலந்து விடும் வழிமுறை என்று ஒரு தத்துவத்தை சொன்னார். இதனால் கவரப்பட்டவர்கள் சிவசங்கர் என்ற பெயருடன் பாபா என்ற பெயரை இணைத்து சிவசங்கர் பாபா என்று அழைக்கத் தொடங்கினர்.

யாகவா முனிவர்

யாகவா முனிவர்

அதேநேரம், 1990களில் மற்றொரு ஆன்மீகவாதி தமிழகத்தில் பிரபலமாக இருந்தார். மற்ற ஆன்மீகவாதிகளை போல அல்லாமல் அவர் பார்ப்பதற்கு மிகவும் எதார்த்தமாக இருந்தார். அவர் பெயர்தான் யாகவா முனிவர். இதனால் சிவ சங்கருக்கு அந்த காலகட்டத்தில் யாகவா முனிவர் கடும் போட்டியாக உருவெடுத்தார். இந்த நிலையில்தான் யாகவா முனிவர் மற்றும் சிவசங்கர் பாபா இருவரையும் ஒரே அரங்கத்தில் சன் டிவி சார்பில் விவாத நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

துண்டால் அடித்த யாகவா முனிவர்

துண்டால் அடித்த யாகவா முனிவர்

சிவசங்கர் பாபா கருத்துக்களை யாகவா முனிவர் கடுமையாக எதிர்த்தார். யார் மிகப்பெரிய ஆன்மீகவாதி என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கோபமடைந்த யாகவா முனிவர் தனது கையில் வைத்திருந்த துண்டை எடுத்து சிவசங்கரை அடித்தார். அப்போது சன்டிவி நெறியாளர், யாகவா முனிவரை தடுத்து நிறுத்தவேண்டிய நிலைமை உருவானது.

விவேக் திரைப்பட காமெடி

விவேக் திரைப்பட காமெடி

இந்த காட்சி அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாகத்தான் நடிகர் விவேக் தனது காமெடி ட்ராக் ஒன்றில் இதே காட்சியை வைத்திருப்பார். யாகவா முனிவர் வேடத்தில் காக்கை சித்தர் என்ற பெயர் கொண்டு தோன்றுவார் விவேக். அதில், சிவசங்கர் பாபா கதாபாத்திரத்தில் மயில்சாமி நடித்திருப்பார். சிவசங்கர் பாபா எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்க கூடியவர் என்பதால் மயில்சாமி அந்த திரைப்படத்தில் சிரித்த முகத்துடன் இருப்பார்.

பிரபலமான சம்பவம்

பிரபலமான சம்பவம்

இப்போது சன் டிவியில் நடைபெற்ற அந்த உண்மை சம்பவ வீடியோ மறந்துபோய் விவேக் மயில்சாமி வீடியோ தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அந்த காமெடி அப்போது புகழ் பெற்றது. சிவசங்கர் பாபா அந்த நிகழ்ச்சியில் பேசும்போது யாகவா முனிவரை நோக்கி.. அவர் வயதில் பெரியவர் . அவருக்கு தெரிந்த ஆன்மீகத்தை அவர் செய்யட்டும் எனக்கு தெரிந்த ஆன்மீகத்தை நான் செய்கிறேன். எங்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த மோதலும் கிடையாது . அவர் வழியில் நான் சொல்ல மாட்டேன், எனது வழிக்கு அவர் வரக்கூடாது என்று பேசியுள்ளார்.

நான் பெரிய ஒழுக்கவாதி

நான் பெரிய ஒழுக்கவாதி

மேலும், சிவசங்கர் பாபா பேசும்போது, நான் சிறு வயதுக்காரன். ஆனால் மிகவும் ஒழுக்கமானவன். ஆனால் யாகவா முனிவர் எனது ஒழுக்கத்தை பொதுவெளியில் சந்தேகப்பட்டு பேசி வருகிறார். இது எனது மரியாதையை குறைத்து வருகிறது. எதையும் தெரியாமல் வயதில் மூத்த யாகவா முனிவர் இப்படிச் சொல்லக்கூடாது. நான் தப்பு செய்பவனாக இருந்தாலும் தொலைக்காட்சியில் வைத்துக்கொண்டா தப்பு செய்வேன். நான் தப்பு செய்யவில்லை என்பதற்கு இதுவே ஒரு ஆதாரம். இவ்வாறு சிவசங்கர் பாபா சொன்ன போது குறுக்கிட்ட யாகவா முனிவர் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

அன்றே சொன்னார் யாகவா முனிவர்

அன்றே சொன்னார் யாகவா முனிவர்

2001ஆம் ஆண்டு சங்கர் பாபாவுக்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்லி விட்டேன். பெண்ணால், மானம் மரியாதை போய் நீ சிறைக்கு போவாய் என்று நான் சொன்னேன். வேதங்கள் பொய் என்று நீ சொன்னதால், அந்தணன் ஒருவர் தான், உன்னை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வார் என்று நான் சொல்லியுள்ளேன். அது நடக்கும் போது எனது சுயரூபத்தை நான் காட்டுகிறேன். இவ்வாறு யாகவா முனிவர் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றிவருகிறது.

யாகவா முனிவரின் கணிப்புகள்

யாகவா முனிவரின் கணிப்புகள்

பெண்ணால்தான் சிவசங்கர் பாபா சிறைக்கு செல்வார் என்று 23 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சந்திப்பில் யாகவா முனிவர் கூறியுள்ளார். இன்று அதுபோல நடந்துள்ளது . 2001 என யாகவா முனிவர் கூறினார். ஆனால் சிவ சங்கர் சிறை சென்றது 2021ல். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வருட எண் கணக்குதான் இரண்டுக்கும் வருகிறது. மேலும் 2000மாவது ஆண்டு துவக்கம் முதலே, பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்திருந்தார் சிவ சங்கர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது. காலத்தை முன் கூட்டியே கணிக்கக் கூடிய வல்லமை தனக்கு இருப்பதாகத்தான் யாகவா முனிவர் கூறிவந்தார். இதனால்தான் அவருக்கு அந்த காலகட்டத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 2000மாவது ஆண்டு மே மாதம் யாகவா முனிவர் மாரடைப்பால் காலமானார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
"Siva Sankar Baba will get arrested for women issue.." this is what Yagava Munivar said on 23 years back in Sun TV's interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X