• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யார் அந்த "விஐபி".. யாஷிகாவுடன் இருந்த ஆண் நண்பர்கள் யார்?.. மக்களிடையே கிளம்பும் சந்தேகங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.. அதேசமயம், இந்த விபத்து ஒருசில சந்தேகங்களை பொதுமக்களிடம் எழுப்பி வருகிறது.

கிழக்கு கடற்கரை சாலையில் நிறைய விபத்துக்கள் நடந்து வருகிறது.. இது புறநகர் பகுதி என்பதாலும், வாகனங்களின் வேகம் அதிகமாக இருப்பதாலும், கட்டுப்பாடுகளை இழந்து வாகனங்கள் தறிகெட்டு குப்புற கவிழ்ந்துவிடுகிறது.. இதனால் ஏராளமான உயிர்கள் காவு வாங்கப்பட்டும் வருகின்றன.

ஏற்கனவே இங்கு விபத்துக்கள் நடப்பதால்தான், கிராம பிரிவு இணைப்பு சாலைகள் உள்ளதை எளிதில் அறியும் வகையில், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும், இணைப்பு சாலைகளில் வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 தோழி

தோழி

சமீப காலமாக, வார இறுதி நாட்களை கழிப்பதற்காக இங்கு ஏராளமானோர், இவ்வழியாகதான் செல்ல வேண்டி உள்ளது.. அப்படிசெல்பவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த மற்றும் இளம் வயதுக்காரர்கள்தான்.. அந்த வகையில்தான் யாஷிகா ஆனந்த் சென்றுள்ளார்.. விபத்தை சந்தித்துள்ளார்.. அவரது தோழி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.. யாஷிகா சிகிச்சையில் உள்ளார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

போலீசில் யாஷிகா தந்த வாக்குமூலத்தில், "விபத்து நடந்த நேரத்தில் நான் குடித்திருக்கவில்லை. காரை அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது" என்று தெரிவித்துள்ளார். யாஷிகாவின் இந்த வாக்குமூலமும், நடந்த விபத்தும் நிறைய சந்தேகங்களை கிளப்பி வருகின்றன.

 ஸ்பீட் கன்ட்ரோல்கள்

ஸ்பீட் கன்ட்ரோல்கள்

விபத்துக்குள்ளான கார், யாஷிகாவின் அம்மா பெயரில் புக் ஆகி உள்ளது.. கடந்த நவம்பரில் காரை வாங்கி இருக்கிறார்கள்.. 6 ஏர்-பேக்குகள் காருக்குள் இருக்கிறது.. மேலும் 3 விதமான ஸ்பீட் கன்ட்ரோல்கள் இருக்கின்றன.. இவ்வளவு நடந்தும், மிக கோரமான முறையில் விபத்த நடந்துள்ளது.. கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேரிட்டது என்று சொன்னாலும், யாஷிகா கைகளை அவ்வப்போது தட்டிக் கொண்டு கேஷூவலாக கார் ஓட்டுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின. கேஷூவலாக கார் ஓட்டும்போது, எப்படி திடீரென கார் தட்டுப்பாட்டை இழக்கும்? என்பதே முதல் சந்தேகமாக எழுகிறது.

 மது அருந்தவில்லை

மது அருந்தவில்லை

அடுத்ததாக, இவர்கள் வார இறுதி நாட்களை கொண்டாடவே பார்ட்டிக்கு சென்றிருக்கிறார்கள்.. ஆனால், மது அருந்தவில்லை என்று வாக்குமூலம் தந்திருக்கிறார்.. பார்ட்டிக்கு சென்றுவிட்டு மது அருந்தவில்லை என்று சொல்வதை, போலீசாரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.. ஆஸ்பத்திரி தரப்பும் உறுதிப்படுத்தவில்லை.. இது ஏற்கும்படியாக இல்லை என்பதே சோஷியல் மீடியாவில் பலரது கருத்தாக உள்ளது.. அதேபோல, உயிரிழந்த தோழி பவானியும் குடித்திருந்தாரா? என்ற தகவலை ஆஸ்பத்திரியும் உறுதியாக சொல்லவில்லை.

 யார் அவர்கள்?

யார் அவர்கள்?

அடுத்ததாக, உடன் பயணித்த ஆண் நண்பர்களின் பெயர்கள்தான் வெளியாகி உள்ளதே தவிர, அவர்களின் பின்னணி குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.. இவர்கள் யார்? என்று தெரியவில்லை.. பெரிய வீட்டு பிள்ளைகளாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டாலும், காரில் பயணித்தவர்களின் விவரமும் இதுவரை ஏன் வெளியாகவில்லை? இதற்கு பின்னணியில் யாருடைய அழுத்தமாவது இருக்கிறதா? தகவல்கள் மறைக்கப்பட என்ன காரணம் போன்ற என்ற சந்தேகமும் எழுகிறது.

சிகிச்சை

சிகிச்சை


எல்லாவற்றிற்கும் மேலாக, யாஷிகா கைதாவாரா? என்ற சந்தேகமும் எழுகிறது.. காரணம், 110 கிமீ தூரத்துக்கு ஓட்டி உள்ளார்.. யாஷிகா இப்படி வேகமாக காரை ஓட்டியது இது முதல்முறை கிடையாது.. ஏற்கனவே ஒருமுறை வள்ளுவர் கோட்டத்தில் இரவு நேரம் சென்று கொண்டிருக்கும்போது, பரத் என்ற உணவு டெலிவரி செய்யும் நபர் மீது மோதியதாக கூறப்படுகிறது.. காயமடைந்த பரத், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்..H

 நண்பர்கள்

நண்பர்கள்

ஆனால், விபத்து நடந்த காரில் நான் செல்லவில்லை. அந்த காரில் இருந்தது என்னுடைய நண்பர்கள்தான். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அவர்களை பார்க்க நான் வேறொரு காரில் அங்கு சென்றேன். அங்கு என்னை பார்த்தவர்கள் நானும் விபத்து காரில் பயணித்தாக செய்தியை பரப்பி விட்டார்கள்" என்று விளக்கம் தந்திருந்தார். ஆனாலும், யாஷிகா மீது இது தொடர்பாக புகார் தரப்பட்டுள்ளது.. அந்த புகாரும் நிலுவையில்தான் உள்ளதாம்.. இப்படி பல்வேறு சந்தேகங்கள் இந்த விபத்து குறித்து எழுந்து வருகின்றன.

English summary
Yashika met car accident and critically injured
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X