சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் விடா முயற்சியாலும் வெற்றிக் கூட்டணியாலும் திமுகவின் ஸ்டாலின் 38 தொகுதிகளை அள்ளி மாஸ் காட்டினார்.

ஜெயலலிதா, கருணாநிதி இறந்த பிறகு தமிழகத்தில் வெற்றிடம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நான் இருக்கிறேன் என ஸ்டாலினும் நாங்கள் இருக்கிறோம் என ஈபிஎஸ்- ஓபிஎஸ்ஸும் தெரிவித்து வருகின்றனர். இத்தனை நாட்கள் நடந்த தேர்தல்களை காட்டிலும் 2019-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

அதாவது இத்தனை நாட்கள் நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இருந்தனர். இதனால் வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் இரு கட்சிகளுக்கும் அவர்களையே சாரும்.

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் சி.ஏ.ஏ..வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- ஸ்டாலின் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் சி.ஏ.ஏ..வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- ஸ்டாலின்

கட்டாயம்

கட்டாயம்

ஆனால் தற்போது இரு பெரும் ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் கட்சியை வழிநடத்தி வரும் திமுகவின் முக ஸ்டாலினுக்கும் அதிமுகவின் ஈபிஎஸ்- ஓபிஎஸ்ஸுக்கும் ஏராளமான பொறுப்புகள் உள்ளன. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு கட்சிகளுக்கும் உள்ளது.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள்

திமுக வழக்கம் போல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் பேரவை, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தன. அது போல் அதிமுகவும் பாஜக, பாமக, தேமுதிக, ஜி கே வாசனின் தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தன.

அதிமுக வெற்றி

அதிமுக வெற்றி

இரு கட்சிகளும் கடுமையாக பிரச்சாரங்களை செய்தன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

வெற்றி

வெற்றி

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் லோக்சபா தேர்தலை சந்தித்த அதிமுக எவ்வித கூட்டணியையும் வைக்காமல் 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் கருணாநிதி இல்லாத திமுகவோ கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது. இது ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

English summary
DMK saw the biggest win in the year 2019 in the LS polls held few months back with the massive win of snatching 38 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X