சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கைலாசாவை வைத்து காமெடி செய்த நித்யானந்தா.. சிட்டிசனாக விரும்பிய சீமான்... கலகலப்பு 2019!

Google Oneindia Tamil News

சென்னை: கைலாசா எனும் தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கினாலும் உருவாக்கினார், ஆளாளுக்கு அவரை கிண்டல் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு படி மேலே போய் தான் கைலாசாவுக்கு சென்றுவிடுவேன் என கூறி அவருக்கே உரிய பாணியில் சிரித்தார்.

நித்யானந்தா கொலை, பாலியல் பலாத்கார வழக்குகளில் தேடப்படுபவர் என்ற போதிலும் அவரது பேச்சுகளும், சொற்பொழிவு என்ற பெயரில் அவர் அடிக்கும் லூட்டிகளும் சிரிப்பை வரவழைத்தன.

கடந்த சில மாதங்களாக அவருக்கு எதிராக பாலியல் புகார் எழுந்ததை அடுத்து நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பதில் விவாதம் நடத்தும் அளவுக்கு பல்வேறு குழப்பங்கள் எழுந்தன.

 ட்விட்டரில் டிரென்ட்டான பிரே ஃபார் நேசமணி.. சுத்தியலையும் நேசமணியையும் மறக்க முடியுமா? ட்விட்டரில் டிரென்ட்டான பிரே ஃபார் நேசமணி.. சுத்தியலையும் நேசமணியையும் மறக்க முடியுமா?

தீவில்

தீவில்

இந்த நிலையில் அவர் தான் இமயமலையில் இருப்பதாகவும் ஈகுவடார் தீவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் வெளியிடும் வீடியோக்களின் ஐபி அட்ரஸை பார்க்கும் போது அவர் பனாமா கால்வாய்க்கு அருகில் உள்ள தீவில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

இந்த நிலையில் நித்யானந்தா வெளிநாட்டில் ஒரு தீவை வாங்கியிருப்பதாகவும் அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நாட்டிற்கு தானே பிரதமர் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்த நாட்டிற்கான கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை உருவாகினார்.

விரல் வைக்கும் அளவுக்கு..

விரல் வைக்கும் அளவுக்கு..

இந்த நாட்டில் குடியேற லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருவதாகவும் எல்லாரும் கைலாசாவை பார்ப்பதால் சர்வரே படுத்துவிட்டதாகவும் கூறி அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு பேசினார்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் சீமானோ அங்கு போய் குடியேறுவேன் காமெடியாக தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிபர் நித்யானந்தா

அதிபர் நித்யானந்தா

அப்போது சீமான் பேசுகையில் என்ஆர்சி வந்துவிட்டால் எனக்கு குடியுரிமை கிடைக்காது. என்னை குடியுரிமை அற்றவனாக்கி விட்டால் கவலையில்லை. நான் ஓடிவிடுகிறேன். எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. கைலாசா என்ற ஒரு நாடு உருவாகி விட்டது. எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்கிறார். அங்கு போய் நாங்கள் அழகாய் இருப்போம் என்றார். சொல்லிவிட்டு சீமான் தனக்கே உரிய பாணியில் சிரித்தாரு பாருங்களேன்.

English summary
Nithyananda creates Kailasa separate country and Seeman wants to be a citizen of the Kailasa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X