மனிதக் கடவுளே.. எங்கள் ஓட்டு உங்களுக்கே.. முதல்வருக்கு போஸ்டர் ஒட்டிய மாணவர்கள்.. ரீவைண்ட் 2020
சென்னை: மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே என முதல்வருக்கு மாணவர்கள் பாராட்டி போஸ்டர் ஒட்டிய சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.
புது வருடம் 2021 இன்னும் சில தினங்களில் பிறக்க போகிறது. அதற்காக நடப்பாண்டில் நடந்த சுவாரஸ் சம்பவங்கள் குறித்து ரீவைண்ட் செய்து பார்ப்பது வழக்கம். அந்த வகையில் 2020 இல் நடந்த நல்ல தரமான சம்பவங்களில் ஒன்றுதான் இந்த கொரோனா.
இந்த கொரோனா உலகையே புரட்டி போட்டு விட்டது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பங்கு சந்தை என புரட்டி போட்ட இது, மாணவர்களின் கல்வியையும் சிதைத்து விட்டது.

கொரோனா வைரஸ்
ஆம், தமிழகத்தில் கொரோனா பரவலால் 1 முதல் 9-10-ஆம் வகுப்புகள் வரை தேர்வுதள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் செய்வதாக அரசு அறிவித்தது. கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் கல்லூரிகள் அவதிப்பட்டு வந்தன. இந்த நிலையில் இறுதியாண்டு தேர்வுகள் தவிர்த்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

கட்டணம்
அதுபோல் அரியல் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தவர்களாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் மாணவர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் மாணவர்களின் மனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குளிர்வித்தார்.

எங்கள் ஓட்டு
இதற்காக மாணவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டினர். மாணவர்களின் மனிதக் கடவுளே! எங்கள் ஓட்டு உங்களுக்கே! என்ற வரிகளுடன் போஸ்டர் இடம்பெற்றிருப்பது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு 6 மாத விடுமுறை, ஆல்பாஸ் என்ற பல்வேறு சலுகைகளை மாணவர்களுக்கு முதல்வர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளித் திறப்பு
அது போல் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் புதிய வகை கொரோனா வேறு பிரிட்டனில் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் புதிய வகை கொரோனா தொடர்பான எந்த கேஸ்களும் அறியப்படவில்லை என்றாலும் மக்கள் சற்று அச்சத்துடனேயே இருக்கிறார்கள்.