சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போட்டோ எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் பெறலாம்.. ஆர்டிஒ அலுவலகங்களில் விளம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பித்தவர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசன்ஸ் பெறலாம் என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் வாங்குவது என்பது முன்பெல்லாம், மிக கடினமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்தியன் படத்தில் நடிகர் கமல்ஹாசன் லைசென்ஸ் பெறுவது எவ்வளவு கடினம் என்பது பற்றி சொல்லியிருப்பார். அந்த அளவுக்கு மிக கடினமாகவே இருந்தது. அந்த படம் வந்து 28 வருடங்களுக்கு பிறகு இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவது ஒரு மணி நேரத்தில் சாத்தியம் என்பதை ஆர்டிஓ அலுவலங்கள் நிரூபித்துள்ளன.

you can get license with in hour, says all RTO offices in tamil nadu

தமிழகத்தில் 70க்கும்மேற்பட்ட இடங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றுதல், ஆர்சி புத்தகத்தின் நகல் பெறுதல் போன்ற பல்வேறு விதமான பணிகள் நடந்து வருகிறது.

தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் பல்வேறு பணிகள் இணையதளம் வழியாக மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து போன்ற அனைத்து பணிகளும் இணையதளத்தில் செய்யக்கூடிய வசதி கொண்டுவரப்பட்து.

இப்போது விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆர்டிஒ அலுவலங்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரங்களில், ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் கார்ட் வடிவிலான ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதால் பிற அலுவலகங்களிலிருந்து என்ஓசி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது மொபைல் எண், ஆதார் எண், இமெயில் முகவரியை தவறாமல் குறிப்பிட வேண்டும் என விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
you can get license with in hour, all RTO offices advertisement in tamil nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X