சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டிலேயே முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில்களில் வரப்போகும் சூப்பர் வசதி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மெட்ரோ ரெயிலில் இனி நீங்கள் பயணித்தால் உங்களை மகிழ்விப்பதற்காக சினிமா பாடல், படம் போன்றவற்றை 'ஆப்' மூலம் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலில் பல்வேறு வசதிகளை செய்து பயணிகள் வருகையை அதிகப்படுத்த விரும்புகிறது சென்னை மெட்ரோ நிர்வாகம்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தால் அல்லது பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் பயணித்தால் 50 சதவீத கட்டண சலுகை வழங்கி வருகிறது.

அதிக ரயில்கள்

அதிக ரயில்கள்

இது ஒருபுறம் எனில் பயணிகள் வசதிக்காக 10 நிமிடத்திற்கு ஒருமுறை, ஏழு நிமிடத்திற்கு ஒருமுறை, ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை என சேவைகளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது.

இணைய வசதி

இணைய வசதி

மேலும் சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் இணையவசதி இல்லாமல் இருந்த நிலையில் அந்த வசதியும் இப்போது செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்கள் அனைத்திலும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் வேலை செய்கின்றது.

ரயில் புறப்பாடு நேரம்

ரயில் புறப்பாடு நேரம்

இது ஒருபுறம் எனில் சென்னையின் அனைத்து மெட்ரோரயில் நிலையங்களிலும் வங்கி ஏடிஎம் சேவைகளை துவக்கி வருகிறது.இதேபோல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் ரயில் வரும், புறப்படும் நேரங்களை டிஸ்பிளே வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

நாட்டிலேயே முதல்முறை

நாட்டிலேயே முதல்முறை

இந்நிலையில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நீங்கள் இனி பயணிக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட் வைபையை ஆன் செய்து இதற்கான பிரத்யேக ‘ஆப்'பை பதிவிறக்கம் செய்தால் விரும்பிய பாடல் மற்றும் படங்களை, டிவி சீரியல்களை பார்க்கலாம் என்கிறது மெட்ரோ நிர்வாகம். ,டிசம்பர் முதல் வாரத்தில் நாட்டிலேயே முதல்முறையாக இந்த வசதியை கொண்டுவர உள்ளதாம் சென்னை மெட்ரோ.

English summary
you can watch Cinema and TV-Serials by WiFi in chennai metro train : chennai metro will give new facility from december first week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X