• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ப்ளீஸ்.. கண்ணை மூடுங்க".. 60 வயது நபரை நம்பி ஏமாந்த பவித்ரா.. திடீர் தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: "கண்ணை மூடுங்க, கிப்ட் காட்டறேன்" என்று 60 வயது பாஸ்கரனை கேட்டு, கத்தியாலும் குத்தி கொன்றாரே பவித்ரா, ஞாபகம் இருக்கா? அந்த இளம்பெண் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. காரணத்தை கேட்டாலே மனம் கனத்து போய்விடுகிறது..!

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர் பாஸ்கர்... இவரது பவித்ரா.. 24 வயதாகிறது.. பிகாம் படித்துள்ளார்..

இவருக்கு ஒரு தோழி இருக்கிறார்.. அந்த தோழியின் அப்பா பெயர் அம்மன் சேகர்-. அவருக்கு 60 வயதாகிறது.. தோழியை பார்க்க வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், அவரது அப்பா சேகருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பவித்ரா

பவித்ரா

அதனால், சேகரும், பவித்ராவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்... இது காதலாக மாறி உள்ளது.. பாலியல் ரீதியாகவும் சேகர் பவித்ராவிடம் நெருங்கி உள்ளதாகவும் தெரிகிறது. பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர்.. அப்போது பவித்ராவை விதவிதமான போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டுள்ளார் சேகர்.

அங்கிள்

அங்கிள்

ஆனால் சேகரை பவித்ரா "அங்கிள்" என்றுதான் கூப்பிட்டு வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் இந்த காதல் விவகாரம் பவித்ராவின் வீட்டுக்கு தெரியவர அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை கண்டித்தனர்.. உடனடியாக வேறு ஒரு மாப்பிள்ளையை தேடினர்.. இதனால் உறவை முறித்து கொள்ள பவித்ரா சேகரிடம் பேசியுள்ளார்.. ஆனால், சேகர் விடவில்லை.. ஏற்கனவே எடுத்து வைத்திருந்த போட்டோக்களை காட்டி பவித்ராவை மிரட்டினார்..

கல்யாணம்

கல்யாணம்

தன்னையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஒருகட்டத்தில் அந்த பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்த பவித்ரா, சேகரை கொன்று விடுவது என்று முடிவு செய்தார். அதன்படியே சேகருக்கு பிறந்த நாள் வந்தது.. அப்போது அவரை தொடர்பு கொண்ட பவித்ரா, உங்களுக்கு ஒரு கிப்ட் வைத்திருக்கிறேன்.. நேரில் வரவும் என்று சொல்லி உள்ளார். இதனால் பூரிப்படைந்த சேகர், பவித்ராவை காண ஓடோடி சென்றார்..

சேகர்

சேகர்

அன்று முழுவதும் பைக்கில் 2 பேரும் ஊர் சுற்றினர்.. நைட் நேரம் வீட்டுக்கு கிளம்பி செல்லும்போது, "கிப்ட் எங்கே" என்று சேகர் கேட்க, கண்ணை மூடுங்க காட்டுகிறேன் என்று பவித்ரா சொன்னார்.. சேகர் கண்ணை மூடியதுமே, ஃபெவிகுவிக் பசையை கண்ணில் தடவிவிட்டு, கையில் ரெடியாக வைத்திருந்த கத்தியை எடுத்து சேகரின் கழுத்தை பலமுறை குத்தியுள்ளார்... இதில் சேகர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த வருடம் ஜனவரியில் நடந்தது.. பிறகு திருவொற்றியூர் போலீசார் பவித்ராவை கைது செய்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்தார் பவித்ரா..

 மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

அப்பா அம்மாவுடன் வசித்து வந்த நிலையில், பவித்ராவின் அப்பா பாஸ்கருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. மஞசள் காமாலை வந்து, கல்லீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.. மேலும் இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் டாக்டர்கள் சொல்லி விட்டனர். இதனால் துடிதுடித்து போனார் பவித்ரா.. அப்பாவை எப்படியாவது காப்பாற்றுவது என்று முடிவு செய்தார்.. அதற்காக தற்கொலை செய்து கொள்ள துணிந்தார்.. முன்னதாக ஒரு லெட்டரையும் எழுதி வைத்தார்.

 லெட்டர்

லெட்டர்

அந்த லெட்டரில், "என் இதயம், மற்றும் கல்லீரலை அப்பாவுக்கு தானமாக தந்துடுங்க... நான் உங்களை காப்பாத்துவேன் அப்பா.. எங்கே தேடினாலும் எனக்கு உங்களை மாதிரி ஒரு அப்பா, அம்மா கிடைக்க மாட்டாங்க . நான் குற்றவாளியோ அல்லது நிரபராதியோ தெரியாது, ஆனால் இனிமேல் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

எனினும், மருத்துவ விதிப்படி இறந்துபோனவரிடம் இருந்து கண்களை மட்டுமே எடுத்து தானமாக்க முடியும் என்பதால் பவித்ராவின் சடலம் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது... இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. பெற்ற மகளுக்காக உயிர்விட்ட தந்தைகளுக்கு மத்தியில், அப்பாவுக்காக உயிரை விட்ட பவித்ரா அனைவரின் கண்களையும் கலங்க வைத்துவிட்டு போயுள்ளார்..!

English summary
Young daughter commits suicide after requesting to give her heart for father
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X