சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்!

ஓடும் பஸ்ஸை நிறுத்தி இளம் பெண் போராட்டம் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Young girl fight with bus driver and conductor in chennai

    சென்னை: "என்னை பார்த்தா அப்படி சொல்றே" என்று கியரை பிடித்து இழுத்து.. ஓடும் பஸ்ஸையே நிறுத்தி விட்டார் பூஜா!

    சென்னை நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவருடன் வில்லிவாக்கம் போவதற்காக 27D பஸ்ஸில் ஏறினார்.

    டிக்கெட் எடுக்கலாம் என்று பாக்கெட்டுக்குள் கையை விட்டால், பணம் குறைவாக இருந்தது. நண்பரிடம் இருக்கும் என்றும், பூஜாவிடம் பணம் இருக்கும் என்றும் ஒருத்தருக்கொருத்தர் நினைத்து பஸ் ஏறிவிட்டார்கள். இப்போது, 10 ரூபாய் குறைந்திருந்தது.

    மத்திய அரசு அடுத்த அதிரடி.. நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர ஒற்றை நுழைவு தேர்வு!மத்திய அரசு அடுத்த அதிரடி.. நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர ஒற்றை நுழைவு தேர்வு!

    கண்டக்டர்

    கண்டக்டர்

    அதனால் பூஜா கண்டக்டரிடம், "10 ரூபா குறையுது.. அதனால் நான் மட்டும் பஸ்ஸில் வர்றேன்.. என் நண்பர் இறங்கிடட்டும்" என்று சொல்லி உள்ளார். ஆனால் கண்டக்டர் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், 2 டிக்கெட்டைக் கிழித்துவிட்டார். அந்த டிக்கெட்டுகளுக்கு பணம் தந்துட்டுத்தான் கீழே இறங்கணும் என்றும் சொல்லி உள்ளார்.

    காதலன்

    காதலன்

    அதற்குள் அடுத்த ஸ்டாப்பிங் வந்துவிடவும், நண்பர் ஏடிஎம்யில் பணம் எடுக்க கீழே இறங்கி விட்டார். அப்போது கண்டக்டர், "உனக்கு லவ் பண்ண தெரியுது.. இப்படி காதலனுடன் ஊர் சுற்ற தெரியுது.. டிக்கெட் வாங்க பணம் மட்டும் இல்லையா.. பிச்சைக்காரி..." என்று தகாதவகையிலும், ஒருமையிலும் பேசியதாக தெரிகிறது.

    சில்லறை

    சில்லறை

    அதற்குள் நண்பர், ஏடிஎம்-ல் பணம் எடுத்து கொண்டு, ஒருஆட்டோவை பிடித்து அந்த பஸ்ஸை ஃபாலோ செய்து, திரும்பவும் அதில் ஏறிவிட்டார். கண்டக்டரிடம் 500 ரூபாயை தந்து மீதி சில்லறை கேட்டுள்ளார். இதை பார்த்ததும் கண்டக்டர் டென்ஷன் ஆகிவிட்டார்.. பூஜாவையும், அவருடைய நண்பரையும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

    கியர் கம்பி

    கியர் கம்பி

    இதனால் கோபமடைந்த பூஜா வேகமாக டிரைவர் சீட்டு பக்கம் போனார்.. அங்கிருந்த கியர் கம்பியை கெட்டியாக பிடித்து கொண்டு, பஸ்ஸை எடுக்க விடாமல் செய்தார். பூஜா, கியரை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் டிரைவரால் பஸ்ஸை எடுக்க முடியவில்லை.

    மன்னிப்பு கேளு

    மன்னிப்பு கேளு

    "நாங்க இறங்கணும்.. முதல்ல கதவை திறங்க.. என்று பூஜா கத்தினார். பிறகு கதவு திறக்கப்பட்டது.. பஸ் முன்னாடி வந்து நின்ற பூஜா, "என்னை எப்படி நீ தப்பா பேசலாம்.. தப்பா பேசியதற்கு மன்னிப்பு கேளுங்க.. இல்லன்னா பஸ்ஸை ஸ்டேஷனுக்கு விடுங்க" என்று ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் டிகே சால நடுரோட்டிலேயே பஸ் நின்றுவிட்டது.

    வீடியோ

    வீடியோ

    பொதுமக்கள் அந்த பகுதியில் ஒன்றுகூடிவிட்டனர். இதனால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. போக்குவரத்து காவலர்கள் விரைந்து வந்து சமாதானப்படுத்தியும் பூஜாவின் பிடிவாதத்தை நிறுத்தவே முடியவில்லை. மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று சொல்லி கொண்டே இருந்தார். இதன் பிறகு, பஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து இந்த பிரச்சனை பேசப்பட்டு, அதன்பின்னரே சமரசம் ஏற்பட்டது.

    English summary
    young girl protest against gov bus conductor and driver in chennai and this video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X