சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளைஞர்கள் சுயதொழில் ஆரம்பிங்க.. அரசு வேலைக்காக காத்திருக்கலாமா... அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: அரசு வேலைக்காக காத்திருக்காமல் இளைஞர்கள் சுயதொழில் செய்ய முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் தொகுதி ஸ்டாலினுக்கு வெற்று கோட்டையாக போகிறது என்றும் அவர், ஆருடம் தெரிவித்துள்ளார்.

Young peoples should come forward to self employment Says Minister Jayakumar

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தபால்துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படாது என்பது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு, அதற்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் அரசின் மீது குற்றம்சுமத்த முடியாததால், நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தார்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், சட்டம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் போதிய விளக்கம் அளித்திருப்பதாகவும், நீட் வர முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள் திமுக, காங்கிரஸ் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி தூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி

அரசு வேலைக்காக காத்திருக்காமல் இளைஞர்கள் சுயதொழில் செய்ய முன்வர வேண்டும் என்றும், 65 லட்சம் பேர் வேலைக்காக காத்திருந்தாலும் அரசு முடிந்தவரை வேலை கொடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

English summary
Minister Jayakumar requests that Young peoples should come forward to self employment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X