சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயல்ல போட்டோ எடுக்கலாம்னு கேட்டுச்சு.. ஆசையா எடுக்க போனோம்.. அதுதான் கடைசி.. கண்ணீர் விடும் அப்பு

செல்பி எடுக்கும்போது காதலி தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    செல்பி எடுக்க ஆசை.. கிணற்றில் விழுந்த ஜோடி.. பெண் பரிதாப மரணம்!

    சென்னை: "என் ஆசைக்காக கிணத்துக்குள்ள இறங்க மாட்டியா..ன்னு பாப்பா கேட்கவும் என்னால மறுக்க முடியல.. அவளுக்காக முதல் முறையா இறங்கினேன்.. ஆனா இப்போ..." என்று தொண்டை அடைக்க கண்ணீர் மல்க கூறுகிறார் அப்பு!

    சென்னை அடுத்த ஆவடி அருகில் உள்ள பட்டாபிராம் பகுதியை சேர்ந்த தம்பதி தாஸ் - பியூலா. இந்தத் தம்பதியின் மூத்த மகன் அப்பு. 24 வயதாகிறது. இவர் ஒரு என்ஜினியர்.

    பியூலாவின் சகோதரர் தாமஸின் மகள் மெர்ஸி. இவருக்கு 21 பவயதாகிறது. பிகாம் படித்துவிட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    மெர்சி

    மெர்சி

    இந்நிலையில், அப்புவுக்கும் மெர்சிக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு, போன 2-ம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. ஜனவரியில் கல்யாணத்தை வைத்திருந்தனர். இதனிடையே, அப்புவும், மெர்ஸியும் பைக்கில் கண்டிகை பகுதிக்கு சென்றுள்ளார்கள். அங்கு விவசாய பகுதியில் செல்பி எடுக்க முயலும்போதுதான், கால்தவறி மெர்சி விழ.. அவரை காப்பாற்ற போய் அப்புவும் கிணற்றில் விழுந்துவிட்டனர். மெர்சி சேற்றில் வசமாக சிக்கி கொள்ள, கடைசியில் அப்புவை மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் காப்பாற்ற முடிந்தது.

    ஜாலி ரைடு

    ஜாலி ரைடு

    தற்போது அப்பு பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். சின்ன வயசிலிருந்தே பழகி வந்த மெர்ஸியின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அப்புவை, வா வெளியில் போகலாம் என்று மெர்சிதான் கூட்டிப் போயுள்ளார். முதலில் படத்துக்குப் போகலாம் என பேசினர். பின்னர் அதை மாற்றிக் கொண்டு அப்படியே பைக்கில் ஒரு ஜாலி ரைடு போயுள்ளனர்.

    கிணற்றுமேடு

    கிணற்றுமேடு

    போன இடத்தில் வழியில் வயலைப் பார்த்த மெர்சிக்கு அந்த அழகின் பின்னணியில் போட்டோ எடுக்க ஆசை வந்துள்ளது. இதையடுத்து அங்கு இருவரும் போயுள்ளனர். கிணற்று மேட்டிலிருந்து உள்ளே பார்த்த அவர்களுக்கு கீழே போகலாமா என்ற ஆசை வந்துள்ளது. இதையடுத்து இறங்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் பாதியிலேயே வழுக்கி விழுந்து விட்டார் மெர்சி.

    மெர்சி பிணம்

    மெர்சி பிணம்

    அதைப் பார்த்துப் பதறிப் போன அப்பு மெர்சியைக் காப்பாற்ற உள்ளே குதித்தார். ஆனால் அதற்குள் மெர்சியின் மூச்சை கிணற்றுத் தண்ணீர் நிறுத்தி விட்டது. தேடித் தேடியும் மெர்சியைக் காப்பாற்ற முடியாத அப்பு அலற கிராமத்தினர் ஓடி வந்து அதற்குப் பிறகு மெர்சியின் பிணத்தைத்தான் அவர்கள் மீட்டனர்.

    இன்னும் மெர்சியின் பிரிவை நம்ப முடியாமல் பெரும் வேதனையில் அழுதபடி உள்ளார் அப்பு.

    English summary
    chennai near, young woman accidently death to take selfie and her lover severe injured
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X