• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

என்னுடன் ஜாலியா இருந்தார் அங்கிள்... கல்யாணம் செய்ய ஆசைப்பட்டாரு.. மிரட்டினார்.. கொன்னுட்டேன்!

|

சென்னை: "லாட்ஜ்களில் ரூம் போட்டு அங்கிள் என்னிடம் ஜாலியா இருந்தாரு.. என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டாரு.. ஆனா நான் ஒத்துக்கல.. அப்போதான் நிர்வாண போட்டோவை காட்டி மிரட்டினாரு.. அதனாலதான் கொன்னுட்டேன்" என்று தோழியின் அப்பாவை கத்தியால் அறுத்து கொன்ற இளம்பெண் வாக்கமூலம் தந்துள்ளார்.

புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சேகர்.. 59 வயதாகிறது.. இவர் ஒரு கற்பூர வியாபாரி.. சேகரின் மகள் மோனிகாவும் திருவொற்றியூரை சேர்ந்த பவித்ராவும் நெருங்கிய தோழிகள்.. இதனால் மோனிகாவை பார்க்க வீட்டுக்கு வரும்போதுதான், சேகர் அறிமுகமாகி உள்ளார். பவித்ராவுக்கு 22 வயதாகிறது.

தோழியின் அப்பா என்பதால் உரிமையாக பழகினார் பவித்ரா... நிறைய செல்பிகள், போட்டோக்களை ஒன்றாக சேர்ந்து எடுத்து கொண்டுள்ளனர்.. ஆனால் அடிக்கடி வீட்டிற்கு வருவதை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பவித்ராவின் டிரஸ் இல்லாத போட்டோக்களை செல்போனில் எடுத்து வைத்துக் கொண்டு, அதை காட்டியே 5 வருடமாக பாலியல் பலாத்காரமும் சேகர் செய்து வந்துள்ளார்.

"கர்ப்பமா இருக்கேன்.. இப்போ எப்படி.." மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்.. பயத்தில் தற்கொலை!

கொலை

கொலை

பவித்ராவுக்கு வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்யவும், சேகருடன் பேசுவதை குறைக்க ஆரம்பித்தார்.. இது சேகருக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. பழைய மாதிரியே பேசணும்.. நெருக்கமாக இருக்கணும் என்று கட்டாயப்படுத்தவும் பவித்ரா அவரை கொல்ல முடிவு செய்துள்ளார். சேருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள்.. பரிசு தர வேண்டும் என்று சொல்லி சேகரை நேரில் வரவழைத்தார் பவித்ரா.

ஃபெவிகுவிக்

ஃபெவிகுவிக்

"கண்ணை மூடிக்குங்க.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தர போறேன்.." என்று பவித்ரா சொல்லவும், சேகர் கண்ணை ஆசை ஆசையாக மூட... ஃபெவிகுவிக் பசையை சேகரின் வாயில் ஊற்றிவிட்டு, கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டார் பவித்ரா. இந்த சம்பவம் தொடர்பாக பவித்ராவை போலீசார் நேற்று கைது செய்தனர்..இது சம்பந்தமாக பவித்ரா போலீசில் சொன்ன வாக்குமூலம் இதுதான்:

வாக்குமூலம்

வாக்குமூலம்

"என் அப்பா மெடிக்கல் ஷாப் வெச்சிருக்கார்.. நான் பிகாம் படிச்சிருக்கேன்.. என் ஃப்ரண்ட் அப்பதான் சேகர்.. அங்கிள், அங்கிள் என்றுதான் கூப்பிடுவேன்... அவரும் அன்பா பேசுவார்.. அப்படித்தான் ஒருநாள் வீட்டுக்கு போனேன்.. என் ஃபிரண்டு அங்கே இல்லை.. அங்கிள்தான் இருந்தார்.. நான் உடனே என் வீட்டுக்கு கிளம்ப நினைத்தேன்.. அதுக்கு அங்கிள், "ஏன், உன் ஃபிரண்டுகிட்டதான் பேசுவியா, என்கிட்ட பேசமாட்டியா" என்று கேட்டார்.. அப்போதுதான் நன்றாக அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

வாங்கி தருவார்

வாங்கி தருவார்

இதுக்குபிறகு அங்கிள் எனக்கு போன் பண்ண ஆரம்பித்தார்.. போனிலும் பேசுவோம்.. நான் என்ன கேட்கிறோனோ, அதையெல்லாம் அங்கிள் உடனே கடைக்கு கூட்டிட்டு போய் வாங்கி தந்துடுவாரு.. அதனால எனக்கு அவரை ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனால் நாள் ஆக ஆக, அங்கிளின் நடவடிக்கை மாற ஆரம்பிச்சுடுச்சு.. ஒரு கட்டத்தில் அவர் சொல்வதை கேட்க ஆரம்பிச்சிட்டேன்.. சில காரணங்களுக்காக அவர் சொல்வதை என்னால் தட்ட முடியவில்லை.

சண்டை

சண்டை

நிறைய இடங்களுக்கு என்னை கூட்டிட்டு போய் ஜாலியா இருந்தார்.. எங்களின் நெருக்கத்தை கண்ட எங்கள் இரு குடும்பத்தினரும் கண்டித்தனர்.. ஆனாலும் 5 வருஷமாக பழகினோம்.. ஆனால் நான் மற்ற ஆண்களிடம் பேசினால் அங்கிளுக்கு பிடிக்காது.. சண்டை போடுவார்.. இப்போ என் வீட்டில் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. இதை கேள்விப்பட்டதும், "என்னை தவிர உன்னை எவனும் தொடக்கூடாது.. நானே உன்னை 2-வதாக கல்யாணம் பண்ணிக்கிறேன்"னு அங்கிள் சொன்னார்.

கொலை செய்தேன்

கொலை செய்தேன்

நான் வயசு வித்தியாசத்தை சொல்லி அதுக்கு மறுப்பு சொன்னேன்.. அப்போதான், என் வீடியோ, நிர்வாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுடுவேன்னு மிரட்டினார்.. அதுக்குதான் அவரை கொல்ல முடிவு பண்ணேன்.. பர்த்டே கிஃப்ட் தரபோறேன்னு சொல்லி வரவழைச்சேன்.. கண்ணை மூடிக்க சொன்னேன்.. உடனே ஃபெவி குவிக்கை அவர் முகத்தில் தடவி, கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டேன்.. ஆரம்பத்துலயே பெரியவங்க பேச்சை நான் கேக்கல.. இப்போ இந்த அளவுக்கு வந்துடுச்சு" என்று கண்ணீர் மல்க கூறினார் பவித்ரா.

English summary
young woman killed 59 year old man due to sex torture and she is under police custody now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X