சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்படியாவது அவருடன் சேர்த்து வச்சுடுங்க.. திமுக பிரமுகர் வீடு முன் பெண் தர்ணா

திமுக பிரமுகர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக பிரமுகர் வீடு முன் பெண் தர்ணா- வீடியோ

    சென்னை: "என்னை எப்படியாவது என் கணவருடன் சேர்த்து வெச்சுடுங்க" என்று சொல்லி பெண் ஒருவர் திமுக பிரமுகர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். கையில் குழந்தையுடன் இளம்பெண் இப்படி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரினிதிஸ். இவரது கணவர் பீனிஸ். இவர்கள் இருவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இப்போது பிரினிதீஸுக்கு 32 வயதும், பீனிஸுக்கு 36 வயதும் ஆகிறது. பீனிசின் தந்தை சென்னை நௌம்பூர் பகுதியை சேர்ந்த ரகுபதி ஆவார். இவர் ஒரு திமுக பிரமுகர்.

    கருத்து வேறுபாடு

    கருத்து வேறுபாடு

    திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டார்கள். ஆனால் திரும்பவும் பெரியவர்கள் சமாதானம் பேசி இருவரையும் சேர்த்து வைத்தார்கள். அதன்பிறகு கடந்த மே மாதம் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தையின் பெயர் ராபர்ட்.

    விவாகரத்து

    விவாகரத்து

    இதனால் தாய் வீட்டில் பிரசவத்துக்கு வந்த பிரினிதிஸ், 8 மாத கை குழந்தையுடன் மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால், பிரிணிதீஸை கணவர் வேண்டாம் என்று சொன்னதுடன், விவாகரத்து கோரி கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளதாகவும் வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.

    குழந்தையுடன் தர்ணா

    குழந்தையுடன் தர்ணா

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரினிதிஸ், 8 மாத குழந்தையுடன் கணவர் வீட்டு வாசப்படியிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இளம்பெண் கைகுழந்தையுடன் போராட்டம் நடத்தி வருவதை அப்பகுதி மக்கள் உடனடியாக நௌம்பூர் போலீசுக்கு தகவல் தந்தனர். இதையடுத்து, 2 குடும்பத்தினரிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    English summary
    Young Lady protest with her child to join with her husband in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X