சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை.. அதான் இப்படி கிளம்பிட்டேன்.. கண்ணீர் சிந்திய ரேவதி.. சிக்கியது எப்படி

நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை என்று புலம்பும் ரேவதி.. கையில் வளையல்.. ஆண் வேடம்.. ரெயின்கோட்.. ஹெல்மெட் சகிதம் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூரில் மளிகை கடை வைத்திருக்கும் பேச்சியம்மாள் என்பவரின் நகையை இளைஞர் ஒருவர் பறித்து கொண்டு ஓடிவிட்டார். பேச்சியம்மாள் போலீசில் புகார் சொல்லவும், போலீசார் இந்த விசாரணையில் மிக தீவிரமாக இறங்கினார்கள்.

திருட்டு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போதுதான், பேச்சியம்மாளின் செயினை பறித்து ஓடிய இளைஞர் ஒரு பைக்கில் ஏறி செல்வது தெரிந்தது. பைக்கை ஓட்டியவர் ஹெல்மட், ரெயின்கோட் போட்டிருந்தார்.. இதையடுத்து அந்த பைக் செல்லும் வழியெல்லாம் இருந்த 64 சிசிடிவி கேமிராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்.. இப்ப ஜெயிலில்!அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்.. இப்ப ஜெயிலில்!

வளையல்

வளையல்

அப்போது பைக் வில்லிவாக்கம் சப்-வே பக்கம் திரும்பிவிட்டது. தொடர்ந்து 3 நாட்களாக அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அந்த சமயத்தில் பைக்கில் வந்த ரேவதியையும் தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.. எல்லா கேள்விகளுக்கும் ரேவதி தில்லாக பதில் அளித்து கொண்டிருந்தபோதுதான், சிசிடிவியில் பார்த்த அதே கலர் பைக்.. கையில் அதே வளையல்.. ரேவதியிடம் போலீசாரின் கண்ணில் பட்டது.

ஜெயச்சந்திரன்

ஜெயச்சந்திரன்

பிறகுதான் விசாரணை படுதீவிரமானது.. பேச்சியம்மாளிடம் நகையை பறித்த உண்மையும் வெளிப்பட்டது.. 30 வயதான ரேவதியுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது அவரது மச்சினன் ராஜேஷ்.. கணவனை விட்டுபிரிந்தாலும், ராஜேஷுடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.. கணவர் ஜெயச்சந்திரன் ஐசிஎப்.பில் உள்ள, பெட்ரோல் பங்க்-கில் மேனேஜராக வேலை பார்க்கிறார்.

ரெயின்கோட்

ரெயின்கோட்

ரேவதிக்கு பணத்தேவை இருந்துள்ளது.. அதனால் 31 வயதாகும் மச்சினனை துதணைக்கு அழைத்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆண் வேடமிட்டு, ரெயின் கோட் போட்டுக் கொண்டு, பைக்கை செம ஸ்பீடாக ஓட்டுவாராம் ரேவதி.. அது மட்டுமல்ல, ரேவதியின் முதல் கணவர் பிரிந்துசென்றுவிட்டார்.. 2-வது கணவர்தான் ஜெயச்சந்திரன்.. முதல்கணவனின் தம்பிதான் ராஜேஷ்.. கைதான ரேவதி, வாக்குமூலமாக தெரிவித்தது இதுதான்:

பணம் இல்லை

பணம் இல்லை

"எனக்கு நிறைய கடன் இருக்கு.. என் கணவர் ஜெயச்சந்திரன் வீட்டு செலவுக்கு பணம் தர மாட்டார்.. அதனால் நானே ஒரு டிபன் கடை ஆரம்பித்து நடத்தி வருகிறேன்.. இருந்தாலும் அதிலும் பணம் சரியாக வரவில்லை.. அதனால்தான் திருட முடிவு செய்தேன்.. ராஜேஷ்-க்கும் எந்த வேலையும் கிடைக்கவில்லை.. அதனால் காலையில் டிபன் கடை முடிந்ததும், திருட சென்றோம்.

திருட்டு செய்திகள்

திருட்டு செய்திகள்

வருமானம் இல்லை என்றாலும் பைக் மீது எனக்கு ஆசை.. அதனால், புதிய பைக்கை வாங்கினேன்.. ஏற்கனவே கார் உள்ளது.. அதற்கு இஎம்ஐ ரூ.12,000 கட்டணும்.. புதிய பைக்குக்கும் சேர்த்து மாசம் ரூ.15,000 வரை கட்டணும்... நியூஸ் பேப்பரில் தினமும் திருட்டு செய்திகளை பார்ப்பேன்.. அதை பார்த்துதான் எனக்கும் திருட எண்ணம் வந்தது.

இஎம்ஐ கட்டினேன்

இஎம்ஐ கட்டினேன்

போன 5-ம் தேதி பைக்கில் நான் மட்டும் தனியாக கள்ளிக்குப்பம் போனேன்.. அப்போதுதான் பேச்சியம்மாளின் கழுத்தில் செயினை பார்த்தேன்.. அதை ராஜேஷிடம் வந்து சொன்னேன்.. இதற்கு பிறகுதான் பைக்கில் கிளம்பி சென்று நகையை அபேஸ் செய்து வந்தோம்.. பைக்கில் போலி நம்பர் பிளேட்டை மாற்றினோம்.. ரெயின் கோர்ட், ஹெல்மெட் என அடையாளம் தெரியாதவாறு என்னை மாற்றி கொண்டேன்.. பேச்சியம்மாளிடம் பறித்த நகையை விற்று பைக், கார்-க்கு இஎம்ஐ கட்டினேன்" என்றார்.

English summary
young woman revathi arrested in chain snatch case near chennai and confessed to police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X