சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பசிக்குதா எடுத்துக்குங்க.." மனசார அழைக்கும் இளம்பெண்.. திரும்பி பார்க்க வைத்த சப்ரினா!

இலவச பிரியாணி தருகிறார் கோவை இளம்பெண்

Google Oneindia Tamil News

சென்னை: "பசிக்குதா எடுத்துக்குங்க.." என்று ஒரு போர்டை வைத்து அசத்தி வருகிறார் சப்ரினா என்ற இளம்பெண்.. யார் இவர்? திடீரென இவர் பெயரை கோவை மக்கள் உச்சரிக்க என்ன காரணம்?

Recommended Video

    POSITIVE STORY கோவை: ரூ.20-க்கு பிரியாணி... அதுவும் இல்லைனா ஃப்ரீ… அன்னப்பூரணியாய் விளங்கும் இல்லத்தரசி!

    கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் தான் சதீஷ், சப்ரினா என்கிற தம்பதியர். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடு கடை வைத்திருக்கிறார்.. ரோட்டோரமாக உள்ளது அந்த சின்ன கடை.. மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும்.. பிரியாணி கடை இது. ஒரு பிரியாணி 20 ரூபாயாம்..!

    வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாக கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா.. அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டலங்களும் விற்கப்படும்..!

    கோவை

    கோவை

    ஆனால், இந்த 4 நாட்களாகவே சப்ரினா ஒரு அறிவிப்பு எழுதி வைத்திருக்கிறார்.. அதில், "பசிக்குதா எடுத்துக்குங்க" என்று எழுதி வைத்துள்ளார்.. அதாவது ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்காக இப்படி எழுதி இருக்கிறார். அதை பார்த்ததும், ஏழை பிள்ளைகள் காசின்றி, இலவசமாகவே பிரியாணி பொட்டலங்களை எடுத்து சென்று சாப்பிட்டு பசியாறுகிறார்கள்.

    பிரியாணி

    பிரியாணி

    சப்ரினாவின் இந்த செயல், கோவையையே திரும்பி பார்க்க வைத்துவிட்டது.. ஒரு பிரியாணி எப்படியும் இப்போது 60, 70 ரூபாய்க்கு ஹோட்டல்களில் விற்கப்படுகிறது.. அதை 20 ரூபாய்க்கு சப்ரினா தருவதே பெரிய விஷயம்.. அதிலும் இலவச பிரியாணியை ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும், தருவது என்பது அதைவிட பெரிய விஷயம்..

    ஏழைகள்

    ஏழைகள்

    இதை பற்றி சப்ரினா சொல்லும்போது, இந்த 3 மாசமாக எம்ப்ட்டி பிரியாணி விற்று வருகிறோம்.. 20 ரூபாய்க்கூட தர முடியாதவர்களுக்கு இலவசமாகவே சாப்பாடு தருகிறோம் என்கிறார்.. சப்ரினா - சதீஷ் கோவை புளியங்குளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருகிறார்கள்.. இவர்களின் சொந்த ஊர் சென்னை.. 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

    சபாஷ்

    சபாஷ்

    சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார்.. சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார்.. இவர் நினைத்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதித்திருக்கலாம்.. இப்படி சாலையோரம் ஒரு அட்டை மீது பிரியாணி பொட்டலங்களை இலவசமாக விற்க வேண்டிய அவசியம் இல்லை.. சப்ரினாவின் கடைக்கு ஏழைகள் திரண்டு சென்று பசியாற்றி கொள்கிறார்கள்.. கடவுள் எங்கே என்று கேட்பவர்களிடம், "இதோ இந்த மனசுதான் கடவுள்" என்று துணிச்சலாக சப்ரினாவை காட்டலாம்..!

    English summary
    Young woman sells Biriyani for 20 rupees and also free in Kovai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X