சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

9 முறை கல்யாண மாப்பிள்ளையா.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. மிஸ்டர் சக்கரவர்த்தி என்ன இது.. !

9 பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒருத்தர் ஒருமுறை, ரெண்டுமுறை புதுமாப்பிள்ளை ஆகலாம்.. ஆனால் மிஸ்டர் சக்ரவர்த்தி 9 முறை புதுமாப்பிள்ளை ஆகி விட்டார். இன்னும் நிறைய முறை மாப்பிள்ளையாக முடிவில் இருந்தார்.. நம்ம போலீஸ் விடலையே.. மாப்பிள்ளையா இருந்தது போதும்.. வா மாமியார் வீட்டுக்கு என்று அழைத்து சென்றுவிட்டனர்!

சென்னை அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் போலீசில் புகாருடன் வந்தார். மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்த சக்ரவர்த்தி என்பவர், கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணை நடத்த, நடத்ததான், விவகாரம் பெரிசு என்பதை உணர்ந்தனர்.

சக்ரவர்த்தி

சக்ரவர்த்தி

புகாருக்கு சொந்தமான சக்ரவர்த்தி என்பவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். எம்.இ படித்திருக்கிறார். ஆனால் இதைவிட பணத்தை எப்படி குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என்று யோசித்தார். கல்யாண வயசு வேறு.. அதனால் மேட்ரிமோனியலில் பதிவு செய்துகொண்டார்.

சமத்து பிள்ளை

சமத்து பிள்ளை

யாரெல்லாம் வசதியான வீட்டு பெண்களோ அவர்களுக்கு வலை விரித்தார். அதுவும் டாக்டர். என்ஜியர் பெண்கள்தான் இவருக்கு தேவைப்பட்டது. இதன்மூலம் வரன் வந்தால், அவர்கள் வீட்டுக்கு செல்வாம்.. பெற்றோரிடம் சமத்து பிள்ளையைபோல பேசுவாராம். அன்பான மாப்பிள்ளை என்ற பெயரும் கிடைத்துவிடுமாம்.

நெருக்கம்

நெருக்கம்

திருமண தேதி நிச்சயம் ஆன உடனேயே, அந்த பெண்ணை வெளியே அழைத்து சென்று நெருக்கமாக இருப்பாராம். அதன்பிறகு நைசாக பணம் கறக்க ஆரம்பிப்பாராம்.. கையில் பணம் வந்ததும் எஸ்கேப் ஆவதுதான் இவரது பிரதான வேலையே.

திருச்சி சிறை

திருச்சி சிறை

இப்படி, ஒவ்வொரு ஊரிலும் 9 பேரை ஏமாற்றி பணத்தை கறந்திருக்கிறார் சக்ரவர்த்தி. மேட்ரிமோனியலில் ஒரு பெயர் இல்லை, அஜய், அருணாச்சலம், விஜயகுமார் என இஷ்டத்துக்கும் பெயரை மாற்றி வைத்து கொண்டு இந்த வேலை பார்த்திருக்கிறார். அதாவது 9 பெண்களிடம் 8 கோடி ரூபாயை இதுவரை ஏமாற்றியுள்ளார். இந்த விஷயமெல்லாம போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சக்ரவர்த்தியை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்து விட்டனர்.

English summary
Police have arrested a youth for allegedly defrauding Rs 8 crore from 9 Women in Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X