• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்ன கொடூரம்.. தலையை தனியாக துண்டித்து.. சர்ச் வாசலில் போட்ட கும்பல்.. ஷாக்கிங்!

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் இளைஞரின் தலையை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டதில் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன!

மதுரை ஊத்தங்குடி சோலையப்பன் நகரை சேர்ந்தவர் முருகானந்தம்.. 22 வயது இளைஞர்.. இவர் செயின்ட் மேரிஸ் சர்ச் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்த ஒரு மர்ம கும்பல் முருகானந்தத்தை விரட்டி தலையை வெட்டி சாய்த்து.. கீழே துண்டாக விழுந்த அந்த தலையை அதே சர்ச் வாசலில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றுவிட்டது.

இந்த கொலையை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.. பிறகு போலீசார் விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர்.. அந்த ரோட்டில் விழுந்த கத்தி, அரிவாளை மீட்டனர்.. அங்கிருந்த சிசிடிவி காட்சியையும் ஆராய்ந்தனர்.. பிறகு இந்த கொலை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது!

 திமுக பிரமுகர்

திமுக பிரமுகர்

மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் வி கே குருசாமி... இவர் திமுக பிரமுகர் ஆவார்.. அதேபோல, அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி.. இவர் இறந்துவிட்டார்.. அதிமுக முன்னாள் மண்டல தலைவராக இருந்தவர். இவர்கள் 2 குடும்பத்துக்கும் ரொம்ப காலமாகவே முன்பகை இருந்து வந்துள்ளது.. இந்த முன் பகை காரணமாகவே 2 தரப்பும் இதுவரை பழிக்குப் பழியாக 15க்கும் மேற்பட்ட கொலைகளை செய்திருக்கிறார்களாம்.

 கொலைகள்

கொலைகள்

இந்த கொலைகளுக்காக இவர்கள் கைதாகி உள்ளனர்.. அவர்கள் ஜெயிலில் இருந்தாலும், வேறு யாராவது இவர்கள் குடும்பத்தினர் பழிக்கு பழியாக இன்னொரு கொலையை செய்துவிட்டு அவர்களும் ஜெயிலுக்கு போவார்களாம்.. அப்படித்தான், கடந்த எம்பி தேர்தலின்போது குருசாமியின் சொந்தக்காரர் எம் எஸ் பாண்டி என்பவரை ராஜபாண்டியின் உறவினர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.

 தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்


இதுக்கு பழிவாங்குவதற்காகதான் திமுக குருசாமியின் தரப்பை சேர்ந்த 4 பேர், ராஜபாண்டி தரப்பை சேர்ந்தவர்களை கொல்ல திட்டம் தீட்டியது.. அதன்படிதான், மணிகண்டன், முனியசாமி ஆகிய 2 பேரையும் கொல்ல முயன்றது.. ஞாயிற்றுக்கிழமை இவர்கள் 2 பேரும் சாலையில் நடந்து சொன்றபோதே, கொல்ல வந்துள்ளனர்.. ஆனால் அவர்கள் 2 பேருமே தப்பி ஓடிவிட்டனர்.

நண்பர்

நண்பர்

அதனால் அவருடன் வந்த முருகானந்தம் என்ற இளைஞர் சிக்கவும் அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர்.. முருகானந்தத்துக்கும், இந்த 2 குடும்பத்தினருக்கும் துளியும் சம்பந்தமே இல்லை.. மணிகண்டன், முருகசாமியின் நண்பர்தான் முருகானந்தம்.. போலீஸ் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தாராம்.. ஆத்திரத்தில் வந்த கும்பல், எதிரியின் நண்பன் முருகானந்தம் என்ற ஒரே காரணத்துக்காக தாக்கிக் கொலை செய்து, தலையை துண்டித்து சர்ச் வாசலில் வீசிவிட்டு போயுள்ளது.

 சர்ச் வாசல்

சர்ச் வாசல்

இந்த சர்ச் அங்குள்ள மெயின் ரோட்டின் சிக்னல் அருகேயே உள்ளது.. இங்குதான் கொலையும் நடந்துள்ளது.. கொலையின் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவ தொடங்கியதுமே பரபரப்பு தொற்றி கொண்டது.. அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குருசாமியின் ஆதரவாளர்களான சின்ன அலெக்ஸ், அழகுராஜா, பழனி முருகன் உள்ளிட்ட 4பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. அவர்கள் தலைமறைவாகி உள்ளதால், தீவிரமாக தேடியும் வருகிறார்கள்.

 உண்மை என்ன?

உண்மை என்ன?

திமுக-அதிமுக 2 பிரமுகர்களின் பழிக்குப் பழி கொலைக்காக, ஒரு அப்பாவி இளைஞனை தவறுதலாக கொன்றுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.. அதேசமயம், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட முருகானந்தம் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி வருகிறது.. எனினும், இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால், போலீசாரே விரைவில் உண்மைதன்மையை வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Youth brutally attacked by a gang in Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X