சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை டூ சென்னை.. 50 நிமிடங்களில் "பறந்த இதயம்.." 36 வயது பெண் உயிர் காப்பாற்றப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயது பெண் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக மதுரையில் விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் இதயம், வெறும், 50 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டு அறுவைசிகிச்சை செய்யபட்டது.

Recommended Video

    மதுரை டூ சென்னை.. 50 நிமிடங்களில் பறந்த இதயம்.. 36 வயது பெண் உயிர் காப்பாற்றப்பட்டது - வீடியோ

    குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயதான பெண் மணி ஒருவர் இருதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவரின் உடல் நிலை மிக மோசமடைந்ததை தொடர்ந்து அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யபட வேண்டிய தேவை ஏற்பட்டது.

    Youth heart flies from Madurai to Chennai

    இந்த நிலையில் மதுரையில் சாலை விபத்தில் சிக்கிய 21 வயது இளைஞர் தமிழ்மணி, வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் மூளைசாவு அடைந்த 21 வயது இளைஞர் தமிழ்மணி உடல் உறுப்புகள் தானம் செய்ய உறவினர் ஒப்புதல் அளித்தனர்.

    இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து 50 நிமிடத்தில் தமிழ்மணியின் இதயம் சென்னை குரோம்பேட்டை கொண்டுவரப்பட்டது.

    Youth heart flies from Madurai to Chennai

    இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் பக்காவாக செய்திருந்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனை செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.

    குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் சிகிச்சை இயக்குனர் சந்தீப் அத்தாவர் தலைமையிலான மருத்துவர்கள் பாதிக்கபட்ட பெண்மணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    English summary
    A 36-year-old woman at a private hospital in Chromepet had her heart transplanted in just 50 minutes after getting it from Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X