• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையில் கொரோனா கிடுகிடு.. மண்டல வாரியான பாதிப்பு விவரம் வெளியீடு

|

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31896 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 15ம் தேதி காலை நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31896 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16671 பேர் குணம் அடைந்துள்ளனர். 14199 பேர் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Zone wise breakup of Covid-19 positive cases in Chennai

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 5216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4082 பேரும், கோடம்பாக்கத்தில் 3409 ஆகவும், தேனாம்பேட்டையில் 3844 ஆகவும், திருவிக நகரில் 2922 ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. அடையாறில் 1805 பேருக்கும், அண்ணா நகரில் 3150 பேருக்கும் வளசரவாக்கத்தில் 1395 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிரம் எடுக்கும் கொரோனா.. மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

ஜூன் 15ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

  • திருவெற்றியூர்: 1171
  • மணலி: 448
  • மாதவரம் 854
  • தண்டையார் பேட்டை 4082
  • இராயபுரம் 5216
  • திருவிக நகர் 2922
  • அம்பத்தூர் 1105
  • அண்ணா நகர் 3150
  • தேனாம்பேட்டை 3844
  • கோடம்பாக்கம் 3409
  • வளசரவாக்கம் 1395
  • ஆலந்தூர் 624
  • அடையாறு 1805
  • பெருங்குடி 594
  • சோழிங்கநல்லூர் 586

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here's the zone wise breakup of Covid-19 positive cases , Overall zone-wise detailed status of COVID-19 cases in chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X