சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிரடி யூடர்ன்.. மீண்டு வருகிறது சென்னை.. மண்டல வாரியான நிலவரம்.. லிஸ்ட் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை; சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 13,744 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகரம் கொரோனாவில் இருந்து விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. அதேநேரம் மற்ற எல்லா மாவட்டங்களிலும் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் ஆறாயிரத்தை கடந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாவும், குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தால் தான் விரைவில் மீள முடியும். அப்படியான நிலை தற்போது சென்னையில் காணப்படுகிறது.

மற்ற ஊர்களில் கொரோனா உச்சம் பெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் தலைகீழாக உள்ளது. பாதிப்பு குறைந்து வருகிறது.

சிக்கன் 65 ஓகே.. அதென்ன என்-95 சிக்கன்?.. மூலிகை ஆம்லெட்டாம்.. கலக்கும் தூங்கா நகரமான மதுரை! சிக்கன் 65 ஓகே.. அதென்ன என்-95 சிக்கன்?.. மூலிகை ஆம்லெட்டாம்.. கலக்கும் தூங்கா நகரமான மதுரை!

குணம் அடைவோர் அதிகம்

குணம் அடைவோர் அதிகம்

சென்னையில். கடந்த 24 மணி நேரத்தில் 1,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதே 24 மணி நேரத்தில் 1,315 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ள போதிலும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துள்ளது. இதுவரை 78,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எத்தனை நோயாளிகள்

எத்தனை நோயாளிகள்

சென்னையில் கொரோனா தொற்றால். இதுவரை 2,011 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 13,744 பேர் மருத்துவமனையில் கொரோனா ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற மாவட்டங்களை சேர்ந்த 488 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை பரிசோதனை

சென்னை பரிசோதனை

சென்னையில் ஆண்கள் 58.76 சதவீதம், பேரும் பெண்கள் 41.24 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (26/07/2020 )மட்டும் சென்னையில் 11,023 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலையும் சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தண்டையார் பேட்டை

தண்டையார் பேட்டை

இந்த பட்டியலின் விவரம் பின்வருமாறு: திருவொற்றியூர் மண்டலத்தில் 441 பேரும், மணலியில் 196 பேரும், மாதவரத்தில் 488 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 605 பேரும், ராயபுரத்தில் 906 பேரும், திருவிக நகரில் 1,171 பேரும், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அம்பத்தூரில் 1100 பேர்

அம்பத்தூரில் 1100 பேர்

அம்பத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 1,100 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,601 பேரும், தேனாம்பேட்டையில் 1,116 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,192 பேர் இன்னமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறைந்தது பாதிப்பு

குறைந்தது பாதிப்பு

வளசரவாக்கத்தில் 886 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 538 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,180 பேரும் பெருங்குடியில் 468 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 368 பேரும், பிற மாவட்டங்களை சேர்ந்த 488 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா நிலவரம்

கொரோனா நிலவரம்

சென்னை நிலவரத்தை பார்க்கும், பாதிப்பு அளவு சீராகவே உள்ளது. குணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையின் மக்கள் தொகை, மிகமிக அதிகம். அதேபோல் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது மருத்துவ கட்டமைப்பு வசதியும் இங்கு சிறப்பாக உள்ளது. எனவே சென்னை விரைவில் கொரோனாவை வெல்லும் என எதிர்பார்க்கலாம்.

Zone wise corona case in Chennai, chennai active cases less in daily

English summary
Zone wise corona case in Chennai, chennai active cases less in daily now 13,744 active cases get treatment in hospitals
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X