• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவை சிறுமி கொலை வழக்கு.. குற்றவாளி பாட்டி இறந்தது எப்படி? புது சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட்

|

கோவை: கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான சந்தோஷ்குமாரின் பாட்டி மரணமும் சந்தேகத்தை ஏற்படுத்துவதால், பாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பன்னிமடையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று இன்று ஆறுதல் தெரிவித்தார்.

Coimbatore rape case taking new twist

பின்னர் பேட்டியளித்த அவர், சிறுமியை கொடூரமாக கொன்று இருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. கோவையில் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

உ.பி., மேற்கு வங்கம், ஒடிசாவில் எந்த கட்சிகளுக்கு அதிக தொகுதி.. இந்தியா டிவி பரபர கருத்துக் கணிப்பு

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு போதை பொருட்களின் விற்பனை அதிகமாக இருந்து வருவது ஒரு காரணம். காவல் துறை இவர்களுக்கு கைப்பாவையாக மாறி உள்ளது. காவல் துறையின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது.

சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் பாட்டியும் சம்பவம் நடந்த அன்று உயிரிழந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் ஒருவரை மட்டுமே கைது செய்து , மற்றவர்களை காப்பாற்ற காவல் துறை முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்வர்களையும் கைது செய்ய வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி இவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும். பன்னிமடை பகுதியில் ஆதி திராவிட மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் உள்ளனர். அடிப்படை வசதிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்த அவர்,

அரசாங்கம் , குடும்பத்தினருக்கு ஒரு கோடி அளிக்க வேண்டும் . குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் . அவருடைய சகோதரியின் கல்விக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

கோயமுத்தூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
நாகராஜன், பி. அஇஅதிமுக வென்றவர் 4,31,717 37% 42,016
ராதாகிருஷ்ணன், சி.பி. பாஜக தோற்றவர் 3,89,701 34% 0
2009
நடராஜன் பி.ஆர். சிபிஎம் வென்றவர் 2,93,165 36% 38,664
பிரபு ஆர் காங்கிரஸ் தோற்றவர் 2,54,501 31% 0
2004
சுப்பராயன், கெ. சிபிஐ வென்றவர் 5,04,981 57% 1,64,505
ராதாகிருஷ்ணன் சி. பி பாஜக தோற்றவர் 3,40,476 39% 0
1999
ராதாகிருஷ்ணன், சி.பி. பாஜக வென்றவர் 4,30,068 49% 54,077
நல்லகணணு;, ஆர். சிபிஐ தோற்றவர் 3,75,991 43% 0
1998
ராதாகிருஷ்ணன் சி.பி. பாஜக வென்றவர் 4,49,269 56% 1,44,676
சுப்பய்யன் கெ.ஆர். திமுக தோற்றவர் 3,04,593 38% 0
1996
ராமநாதன் எம் திமுக வென்றவர் 4,63,807 57% 2,62,787
குப்புசாமி சி.கெ. காங்கிரஸ் தோற்றவர் 2,01,020 25% 0
1991
குப்புசாமி சி.கெ. காங்கிரஸ் வென்றவர் 4,08,891 59% 1,86,064
ரமணி கெ. சிபிஎம் தோற்றவர் 2,22,827 32% 0
1989
குப்புசாமி, சி.கெ. காங்கிரஸ் வென்றவர் 4,26,721 57% 1,40,068
உமாநத், ஆர். சிபிஎம் தோற்றவர் 2,86,653 38% 0
1984
குப்புசுவாமி சி. கெ. காங்கிரஸ் வென்றவர் 3,55,525 58% 1,02,519
உமாநாத் ஆர். சிபிஎம் தோற்றவர் 2,53,006 41% 0
1980
ராம் மோகன் அலிஸ் இரா மோகன் ஆர். திமுக வென்றவர் 2,76,975 54% 56,109
பார்வதி கிருஷ்ணன் சிபிஐ தோற்றவர் 2,20,866 43% 0
1977
பார்வதி கிருஷ்ணன் சிபிஐ வென்றவர் 2,67,424 52% 21,178
லட்சுமணன் எஸ்.வி. என்சிஓ தோற்றவர் 2,46,246 48% 0
1971
கெ. பாலதண்டாயுதம் சிபிஐ வென்றவர் 2,14,824 53% 77,053
ராமசாமி என்சிஓ தோற்றவர் 1,37,771 34% 0

 
 
 
English summary
Marxist Party Secretary K.Balakrishnan insisted that the death of the rape accused's grandmother is suspicious.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more