For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை சிறுமி கொலை வழக்கு.. குற்றவாளி பாட்டி இறந்தது எப்படி? புது சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட்

Google Oneindia Tamil News

கோவை: கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான சந்தோஷ்குமாரின் பாட்டி மரணமும் சந்தேகத்தை ஏற்படுத்துவதால், பாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பன்னிமடையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று இன்று ஆறுதல் தெரிவித்தார்.

Coimbatore rape case taking new twist

பின்னர் பேட்டியளித்த அவர், சிறுமியை கொடூரமாக கொன்று இருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. கோவையில் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

உ.பி., மேற்கு வங்கம், ஒடிசாவில் எந்த கட்சிகளுக்கு அதிக தொகுதி.. இந்தியா டிவி பரபர கருத்துக் கணிப்பு உ.பி., மேற்கு வங்கம், ஒடிசாவில் எந்த கட்சிகளுக்கு அதிக தொகுதி.. இந்தியா டிவி பரபர கருத்துக் கணிப்பு

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு போதை பொருட்களின் விற்பனை அதிகமாக இருந்து வருவது ஒரு காரணம். காவல் துறை இவர்களுக்கு கைப்பாவையாக மாறி உள்ளது. காவல் துறையின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது.

சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் பாட்டியும் சம்பவம் நடந்த அன்று உயிரிழந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் ஒருவரை மட்டுமே கைது செய்து , மற்றவர்களை காப்பாற்ற காவல் துறை முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்வர்களையும் கைது செய்ய வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி இவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும். பன்னிமடை பகுதியில் ஆதி திராவிட மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் உள்ளனர். அடிப்படை வசதிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்த அவர்,
அரசாங்கம் , குடும்பத்தினருக்கு ஒரு கோடி அளிக்க வேண்டும் . குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் . அவருடைய சகோதரியின் கல்விக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

English summary
Marxist Party Secretary K.Balakrishnan insisted that the death of the rape accused's grandmother is suspicious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X