For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வளர்ச்சி.. சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வர்

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வளர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வளர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார்.

ஒரு சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் முன்னேற்றம்தான் வளர்ச்சியின் அளவுகோலாக பார்க்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள், அடித்தட்டு மக்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமை.

CM Edappadi Palanisamy focuses on BC, MBC & Minorities Welfare Department

அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளில் பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதிலும் கடந்த 2 வருடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முக்கிய திட்டங்களை இதன் மூலம் வெளியிட்டார்.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வளர்ச்சி பெற வேண்டும் என்று பின்வரும் திட்டங்கள் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது:

  • அரசுப் பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ / மாணவியருக்கு தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிசி பிரிவில் மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள் மற்றும் எம்பிசி பிரிவில் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் இதனால் பயன் பெறுவார்கள். இதை பெறுவதற்கு ஆண்டு வருமான வரம்பு ரூ.1,00,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
  • இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் பயன் அடைவார்கள். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பயன்பெறுவார்கள். இதன் மூலம் சிறப்பு கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் அரசு மூலம் வழங்கப்படுகிறது.
  • தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கான திட்டம்) செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இதில் பலன் பெறுவார்கள். இதன் மூலம் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும்.
  • அரசு மூலம் பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை பெற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல் குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது. அதே சமயம் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நிபந்தனை ஏதும் இல்லை.
  • பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது. மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நிபந்தனை ஏதும் இல்லை.
  • பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டிலுள்ள தொழில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவியருக்கு பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
  • மாவட்ட அளவிலான பரிசுகள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும்) வழங்கப்படுகிறது. அதில் முதல் பரிசு ரூ.6,000 பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு பேருக்கு முதல் பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் இரண்டாம் பரிசு ரூ.4,000/- பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு பேருக்கு இரண்டாம் பரிசுகள் வழங்கப்படுகிறது. மூன்றாம் பரிசுகள் - . ரூ.2,000/- பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு பேருக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்படுகிறது.
  • மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான (பாலிடெக்னிக்) இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்நுட்ப பயிலகங்களில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இதனால் பலன் அடைவார்கள். இவர்களின் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X