For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி டூ அத்திவரதர்.. முதல்வர் பழனிசாமி யோகக்காரர்தான்.. இரண்டரை வருட ஆட்சியில் இவ்வளவு சிறப்பா!

முதல்வர் பழனிசாமியின் இரண்டரை வருட ஆட்சியில் தமிழகத்தில் பல சிறப்பான சம்பவம், நற்காரியங்கள், சுவாரசியங்கள் நடந்துள்ளது.

சென்னை: முதல்வர் பழனிசாமியின் இரண்டரை வருட ஆட்சியில் தமிழகத்தில் பல சிறப்பான சம்பவங்கள், நற்காரியங்கள், சுவாரசியங்கள் நடந்துள்ளது.

சிலருக்கு அதிர்ஷ்டம் எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். இப்போது தமிழகத்திற்கு அப்படித்தான் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறிக் கொண்டு இருக்கிறது. முதல்வர் பழனிசாமியின் கடந்த இரண்டரை வருட ஆட்சியில் தமிழகத்தில் பல அதிரடி விஷயங்கள் நடந்துள்ளது. இதற்கு முன் எந்த முதல்வருக்கும் வாய்க்காத பல சிறப்புகள் தமிழக முதல்வருக்கு உண்டாகி உள்ளது. யாருமே கனவு கூட காணாத பல சாதனைகளை தமிழக முதல்வர் பழனிசாமி அமைதியாக செய்துவிட்டார்.

CM Palanisamy is the luckiest CM Tamilnadu can ever get: Here is the reason

முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சியில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அத்திவரதர் எழுந்தருளியதுதான். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இந்த முறை நடந்ததுதான். கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை இந்த வைபவம் நடந்தது. 40 வருடங்களுக்கு ஒரு முறை எழுந்தருளும் அத்திவரதர் காஞ்சியில் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலித்தார்.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை அத்தி வரதர் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். அதன்பின் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டுனர்.

அத்திவரதர் தரிசனம் தந்த நாட்களில் 55 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கோவிலில் வழிபாடு நடத்தினார்கள். வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்த கோவிலை தரிசிக்க மக்கள் குவிந்தனர். உலகம் முழுக்க அத்திவரதர் புகழ் பெற்றார். லட்சக்கணக்கில் தினமும் கூட்டம் வந்தாலும் கூட எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் அதிமுக தலைமையிலான அரசு மிக கவனமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Palanisamy is the luckiest CM Tamilnadu can ever get: Here is the reason

அதேபோல் தாமிரபரணியில் புஷ்கர விழா இன்னொரு சாதனை என்றே கூறலாம். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டதும் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும்.

அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. திருவிளையாடல் புராணம், தாமிரபரணி மகாத்மதியம் உள்ளிட்ட நூல்களில் தாமிரபரணியின் சிறப்புகள் பற்றியும் புனித நீராடுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அதிமுக ஆட்சியின் போது புஷ்கர விழா கொண்டாடப்பட்டது பெரிய சிறப்பை தேடித்தந்தது.

இந்தியா முழுக்க இந்த விழா பிரபலம் அடைந்தது. மத்திய அமைச்சர்கள் பலர் இந்த விழா குறித்து கேட்டறிந்ததும் குறிப்பிடத்தக்கது.

CM Palanisamy is the luckiest CM Tamilnadu can ever get: Here is the reason

அதேபோல் முதல்வர் பழனிசாமியின் ஆட்சியின் கீழ்தான் இரண்டு நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்தார். பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். சென்னையில் இருந்து கார் மூலம் அவர் மகாபலிபுரம் சென்றார். மறுநாள் கோவளத்தில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் தமிழர்களை பாராட்டினார். அதில், மிக சிறப்பான வரவேற்பை நீங்கள் எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள். நாம் இதுபோல அடிக்கடி ஆலோசனைகளை செய்ய வேண்டும். அடிக்கடி கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த சந்திப்பு ஒரு நல்ல முடிவு., என்று குறிப்பிட்டார்.

ஆம் அதிமுக அரசு கொடுத்த சிறப்பான வரவேற்பை பார்த்து அவரே திகைத்து போனார். அதேபோல் தமிழக அதிமுக அரசு கொடுத்திருந்த பாதுகாப்பும், முதல்வர் பழனிசாமியின் சரியான திட்டமிடலும் மிக சிறப்பாக பாராட்டப்பட்டது. சீன அதிபரின் வருகையால் தமிழக அரசின் சுற்றுலா துறை புதிய உயரம் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அனைத்திற்க்கும் முத்தாய்யப்பாக இன்னோர் விஷயமும் நடந்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமியின் ஆட்சியின் கீழ்தான் கடந்த இரண்டரை வருடத்தில் மேட்டூர் அணை மொத்தமாக 4 முறை முழு கொள்ளவை எட்டி நிரம்பி உள்ளது. கடந்த 2018ல் ஒருமுறையும், இந்த வருடம் மூன்று முறையும் மேட்டூர் அணை மொத்தமாக நிரம்பி உள்ளது.

CM Palanisamy is the luckiest CM Tamilnadu can ever get: Here is the reason

மேட்டூர் அணை கட்டப்பட்டு 85 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மேட்டூர் அணை பாசனம் மூலம் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணையை பல இடங்களில் தூர்வாரி, அதில் மராமத்து பணிகளையும் முதல்வர் மேகொண்டார். இதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிதுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த வருடம் முதல்வர் பழனிசாமி தன்னுடைய கைகளால் மலர் தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். முதல்வர் பொறுப்பு வகிப்பவர், நீர்திறந்து விடுவது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். இதுவரை எந்த முதல்வரும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்ததில்லை. இந்த யோகத்திற்கும் அவரே சொந்தக்காரராக இருக்கிறார்.

முதல்வர் பழனிசாமியின் ஆட்சியின் கீழ்தான் தமிழகத்தின் கடந்த இரண்டு வருடமாக மழை பரவலாக பெய்தது. இந்த மழை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், பெய்து வந்தது. கடந்த வாரம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பரப்பான செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி போன்ற பகுதிகளில் வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஒருமுறை அல்ல, நான்குமுறை கடைமடைக்கு நீர் சென்றது. மண் குளிர்ந்தது போல விவசாயிகள் மனமும் குளிர்ந்தது!

இதோ முதல்வர் பழனிசாமியின் ஆட்சியின் கீழ் இந்த வருடம், இன்று மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. விவசாயத்திற்கும் வேகமாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மீண்டும் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால். வரும் வருடம் மூன்று போகம் கண்டிப்பாக விளையும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X