For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோபல் வெற்றியாளர் அபிஜித் சொன்ன திட்டங்கள்.. தீவிரமாக செயல்படுத்தும் முதல்வர் பழனிசாமி.. செம!

நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி சொன்ன திட்டங்கள் பலவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

சென்னை: நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி சொன்ன திட்டங்கள் பலவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் தமிழகத்தில் வேகமாக வறுமை ஒழிப்பு செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. அதிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றி வருவதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது.

CM Palanisamy s AIADMK government consulted with Nobel winner Abhijit for many time

பல வருடங்களாக தமிழக முதல்வர்கள் வெளிநாடு செல்லாமல் இருந்த போதும், முதல்வர் பழனிசாமிதான் துணிந்து வெளிநாடு சென்றார். அதோடு வெளிநாட்டில் இருந்து பல நலத்திட்டங்களை, பல கோடி முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்.

உலகம் முழுக்க இருக்கும் நலத்திட்டங்களை, மாதிரி திட்டங்களை முதல்வர் பழனிசாமி தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அதிலும் தமிழகத்தில் வறுமையை ஒழிக்கவே அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டு அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். இந்தியாவில் பிற மாநிலங்களில் வறுமையை எப்படி சமாளிக்கிறார்கள். உலக நாடுகள் வறுமையில் இருந்து எப்படி மீண்டும் வந்தது என்பதை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார் முதல்வர் பழனிசாமி.

எல்லா வருடமும் பட்ஜெட்டில் தமிழக அரசு வறுமை ஒழிப்பிற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி வருகிறது. வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு இந்த வருடம் ரூ.1,031 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . இந்த புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் மக்கள் வறுமையில் இருந்து வெளியேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Palanisamy s AIADMK government consulted with Nobel winner Abhijit for many time

கடந்த திமுக ஆட்சிகளில் ஒதுக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமாக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் வறுமை ஒழிப்பிற்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

அதேபோல் ஊரகப் பகுதிகளில் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது ஊரகப் பகுதிகளில், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள குக்கிராமங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்திடும். மேலும் முதல்வர் பழனிசாமி ஆணைப்படி, 2018-19 ஆம் நிதியாண்டில், 1,500 கி.மீ. நீளத்திற்கு ஊரகப் பகுதிகளில் ஓரடுக்கு கப்பிச் சாலைகள் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது

அதேபோல் முதல்வரின் ஆணைப்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 2018-19ஆம் நிதியாண்டில், 200 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் 107 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில், 50 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் 5 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளை பசுமையாக்கும் நோக்கத்தில், முதல்வர் பழனிசாமி அவர்களின் ஆணைப்படி, கிராம ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், நெடுஞ்சாலைகள், பிரதம மந்திரி கிராம திட்ட சாலைகளின் இருமருங்கிலும், 2018-19 ஆம் நிதியாண்டில் 10 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு 20 இலட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி 92 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் 650 கிணறுகள் 44 கோடியே 95இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பான வட்டாரம் என மத்திய நிலத்தடி நீர்வள அமைப்பினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், தனிநபர் விவசாய நிலங்களில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கி விவசாய விளைநிலங்களின் பரப்பினை அதிகரிக்க 2018-19 ஆம் நிதியாண்டில் 500 கிணறுகளும், 150 சமுதாய குடிநீர் கிணறுகளும் மொத்தம் 44 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

CM Palanisamy s AIADMK government consulted with Nobel winner Abhijit for many time

இப்படி வரிசையாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வறுமையை ஒழிக்கவும், ஊரக வளர்ச்சிக்கும் கொண்டு வருகிறது. இதற்கும் நோபல் பரிசு வென்ற பொருளாதர நிபுணர் அபிஜித் பானர்ஜிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 2019ம் வருடத்திற்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்தியர் ஒருவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்த நோபல் பரிசை பெற்று இருக்கிறார்.

இவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்துல் லத்தீப் ஜெமீல் போவார்ட்டி ஆக்ஷன் லேப் (Abdul Latif Jameel Poverty Action Lab) என்ற மையத்தை உருவாக்கி இவர் வறுமை குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.

உலகம் முழுக்க எப்படி வறுமையை ஒழிப்பது. எளிதான திட்டங்களை எப்படி கொண்டு வருவது. மக்களிடம் பண புழக்கத்தை எப்படி அதிகரிப்பது என்று இவர்கள் மூவரும் நிறைய திட்டங்களை வகுத்து இருக்கிறார். இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தமிழக அதிமுக அரசு இவரின் திட்டங்களை கடந்த 5 வருடங்களாக செயல்படுத்தி வருகிறது. இவரின் அப்துல் லத்தீப் ஜெமீல் போவார்ட்டி ஆக்ஷன் லேப் வழங்கும் வறுமை ஒழிப்பு திட்டங்களை 2014ல் இருந்தே தமிழக அதிமுக அரசு பின்பற்றி வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தொடங்கி தற்போது இருக்கும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி வரை, அதிமுக அரசு பல திட்டங்கள் குறித்து அபிஜித்திடம் விவாதித்துள்ளது. இவரின் அப்துல் லத்தீப் ஜெமீல் போவார்ட்டி ஆக்ஷன் லேப்பிடம் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. வறுமையை ஒழிப்பதற்காக முதல்வர் பழனிசாமி தொடர்ந்து இவர்களுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்து வருகிறார்.

அதற்கு உதாரணம்தான் நாம் மேலே கண்ட ஊரக வளர்ச்சி திட்டங்கள். இந்தியாவிலேயே முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு மட்டுமே தற்போது நோபல் பரிசு பெற்ற ஒரு பொருளாதார நிபுணரிடம் ஆலோசனைகளை பெற்று வறுமை ஒழிப்பில் இறங்கி உள்ளது. அதில் பெரிய அளவில் வெற்றியையும் கண்டுள்ளது.

CM Palanisamy s AIADMK government consulted with Nobel winner Abhijit for many time

சில கட்சிகள் இவரிடம் தேர்தல் அறிக்கைக்கு உதவி கேட்டு இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் கட்சி யாரும் இவரிடம் ஆலோசனைகளை பெறவில்லை. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மட்டுமே அந்த பெருமைக்கு உரியது.

அந்த வகையில் அதிமுக அரசு இதில் 16 அடி பாய்ந்துவிட்டது என்று கூறலாம். தேடி செல்வம் சேர் என்பார்கள்.. அப்படித்தான் மக்களின் நன்மைக்காக உலகம் முழுக்க இருக்கும் அறிஞர்களை எல்லாம் நாடி முதல்வர் பழனிசாமியின் அதிமுக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X