For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கூட்டர்.. மகப்பேறு.. திருமணம்.. பெண் முன்னேற்றத்திற்கான மாஸ் திட்டங்கள்.. அசத்தும் தமிழக அரசு!

சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஏற்ற திட்டங்களை வரிசையாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

சென்னை: சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஏற்ற திட்டங்களை வரிசையாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இதற்காக எல்லா வருடமும் அதிக அளவு பணம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அதிமுக அரசு பெண்கள் முன்னேற்றத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், திருமணம், குழந்தை பேறு, விதவைகள் மறுவாழ்வு என்று பல முக்கிய விஷயங்கள் மீது அதிமுக அரசு அதீத கவனம் செலுத்துகின்றது.

CM Palanisamy s AIADMK government focus on Women empowerment schemes

தமிழக அரசு மகளிரின் பாதுகாப்பிற்கும், சமூக பொருளாதார அதிகார பகிர்விற்கும் முதலிடத்தை அளிப்பதுடன் புதிய திட்டங்கள் மூலம் அதை சாத்தியப்படுத்தி வருகிறது. விதவை மறுதிருமண நிதியுதவித் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம், கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம் என்று திருமணம் தொடர்பான நிறைய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தற்போது பெண்கள் முன்னேற வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமியும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அதிமுக ஆட்சியில் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பது. அப்போது 4 கிராம் தங்கமும், 25 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. கடந்த 2016 மே 23 ஆம் தேதி முதல் திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்கப்படும் தங்க நாணயத்தின் அளவானது 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது.

CM Palanisamy s AIADMK government focus on Women empowerment schemes

தற்போது தமிழக முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசு அதை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பொருளாதார முன்னேற்றம், சமநிலை, சமூக உரிமைகள் மற்றும் சமூக நீதி பெற்று பயன்பெறும் வகையில் பெண்களுக்கு இந்த சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 450 கோடி ரூபாய் வரை தமிழக முதல்வர் பழனிச்சாமி மூலம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 5,220 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 8 ஆண்டுகளில் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.1,050 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எல்லா மாவட்டத்தில் 3000 பெண்கள் வரை தேர்வு செய்யப்பட்டு அதில் 2500க்கும் அதிகமான பேருக்கு வருடா வருடம் இந்த பணம் மற்றும் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுக்க எல்லா வருடமும் 12 ஆயிரத்து 500 பேர் இந்த திட்டம் மூலம் கட்டாயமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதன் மூலம் கடந்த 8 வருடங்களில் மொத்தமாக இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 231 பேர் பயன்பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் கீழ் 55 ஆயிரம் பெண்கள் வரை இதனால் நேரடியாக பலன் அடைந்துள்ளனர். இந்த வருட பட்ஜெட்டில் இதற்காக 1050 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றவனுடன் போட்ட முதல் கையெழுத்துகளில் அம்மா ஸ்கூட்டர் திட்டமும் ஒன்றாகும். முதல்வராக பதவி ஏற்றதும் 2017ல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பச்சை நிற பேனாவில் 5 பைல்களில் கையெழுத்து போட்டுள்ளார். முக்கியமாக பெண்கள் ஸ்கூட்டி வாங்க 50 சதவிகித மானியத்திற்கு முதல் கையெழுத்து போட்டார்.

உழைக்கும் மகளிரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 சதவீத மானியத்தில் அம்மா டூவீலர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2018-19ம் ஆண்டுக்கு இந்த பைக் வாங்க ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், தவறியவர், 18 முதல், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்காக ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். தமிழக அரசு சார்பில் இருசக்கர வாகனம் பெற ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50% இவற்றில் எது குறைவோ அது வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மானியத்திற்காக ரூ.250 கோடியை ஒதுக்கீடு செய்து வருகின்றனர். இந்த வருடத்தில் இதற்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே 1.52 லட்சம் பெண்கள் இதனால் பலன் அடைந்துள்ளனர். வருடம் தோறும் 2 லட்சம் பெண்கள் வரை இதனால் பலன் அடைகிறார்கள்.

அதேபோல் மகப்பேறு காலத்திற்கான 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட 'அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016ல் துவங்கி வைத்தார். தற்போது இந்த திட்டம் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி அரசால் பின்பற்றப்பட்டு வருகிறது.

மகப்பேறின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும். இதை எல்லாம் தவிர்க்க ஆயுர்வேத மூலிகை மருந்துகள் பெண்களுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும். ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட 'அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் பெண்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் எல்லா வருடமும் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.

மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான அம்மா தாய் சேய் நல பெட்டக திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த வருடம் அம்மா தாய்சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்திற்கு ரூ.1001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாய் சேய் நல பெட்டகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சத்துமாவு பேக்கெட்டுகள், இரும்பு சத்து டானிக், விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம் ஒரு கிலோ, ஆவின் நெய், ஆல்பெண்ட சோல், குடற்புழு மாத்திரை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தமிழக அரசு சார்பில் KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த காவலன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் நடக்கும் கொலை,கொள்ளை, போன்ற சம்பவங்கள் எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இந்த KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

KAVALAN Dial 100 என்ற இந்த ஆப்பை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவசர காலத்தில் "100" என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியைத் தொடுவதின் மூலம், நேரடியாக மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள இயலும்.

அப்போது, தொடர்புகொள்பவர்களின் முகவரியும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியும். பெண்களை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதை உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வாறு பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் வரிசையாக தமிழக அரசு கலக்கல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X