For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் நம்பர் 1.. சுற்றுலாத்துறையில் தமிழகத்திற்கு தனி மகுடம்.. அசத்தும் முதல்வர் பழனிசாமி!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கீழ் தமிழகத்தின் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் சுற்றுலாத்துறையில் தமிழ்கம் முதல் இடத்தில் உள்ளது.

'என்னால் இந்த மாமல்லபுரம் சந்திப்பை மறக்க முடியாது. இது மிகவும் சிறப்பாக இருந்தது. தமிழர்களின் விருந்தோம்பல் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன். அதை தற்போது நேரில் கண்டுள்ளேன். விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்தது; மனம் மகிழ்ந்தேன். '' இது சமீபத்தில் தமிழகம் வந்து சென்று சீன அதிபர் ஜி ஜின்பிங் சொன்னது.

CM Palanisamy s AIADMK government makes TN the No.1 state in tourism

தமிழகத்தின் சிறப்பான வரவேற்பை பார்த்துவிட்டு மனம் குளிர்ந்து சீன அதிபர் இப்படி பாராட்டினார். பிரதமர் மோடியும், இந்தியாவையும் சீனாவையும் சென்னை இணைத்துவிட்டது என்று பேசி இருந்தார். ஆம் சீன அதிபருக்கு தமிழக அதிமுக அரசும் மத்திய அரசும் இணைந்து அளித்த சிறப்பான விருந்தோம்பல் உலகம் முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக அதிமுக அரசு இந்த சந்திப்பிற்காக மிக தீவிரமாக செயல்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி சாலைகளை சுத்தம் செய்வது, அலங்காரம் செய்வது என்று பல முக்கியமான விஷயங்களை எந்த சுணக்கமும் இன்றி கட்சிதமாக செய்து முடித்தது. ஆனால் இது இப்போது மட்டும் கிடையாது. தமிழகம் கடந்த 4 வருடங்களாக சுற்றுலா துறையில் இதுபோல் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

முக்கியமாக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு மிக தீவிரமாக தமிழ்நாடு சுற்றுலாவை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்திற்குத்தான் அதிக அளவில் எல்லா வருடமும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழகம்தான் சுற்றுலா துறையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

CM Palanisamy s AIADMK government makes TN the No.1 state in tourism

முதல்வர் பழனிசாமி ஆட்சியின் கீழ் கடந்த வருடம் மட்டும் தமிழகத்திற்கு 4,684,707 பேர் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். இதில் கணிசமான வெளிநாட்டினரும் அடங்குவார்கள். சுற்றுலாவை எடுத்துக்கொண்டால் நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது.

CM Palanisamy s AIADMK government makes TN the No.1 state in tourism

எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் என்று தமிழகம் முழுக்க சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருக்கிறது. யுனெஸ்கோவினால் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஐந்து உலக பாரம்பரியக் களங்கள் உண்டு.

இந்தியாவில் தமிழகம்தான் எல்லா வருடமும் சுற்றுலாவிற்கு அதிக அளவில் செலவு செய்கிறது. இந்த வருட 2019-2020 பட்ஜெட்டில் அதிமுக அரசு சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக ரூ.186 கோடி ஒதுக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் எல்லா வருடமும் அரசு சார்பாக 150 கோடி ரூபாய்க்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி எல்லா வருடமும் மாவட்ட வாரியாக 20-25 கோடி ரூபாய் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு உதவப்படுகிறது. இதற்கு முந்தைய திமுக ஆட்சிகளில் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு 40-45 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது நடந்து வரும் அதிமுக ஆட்சியில் இது 180 கோடி ரூபாயாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிமுக அரசு சார்பாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் மிக கவனிப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் சுற்றுலாத்துறை கணக்காய்வின்படி சுற்றுலாத்துறை மூலம் அதிமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு ரூ.10. லட்சம் செலவினத்தில் 47.5 விழுக்காடு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் இளைஞர்களுக்குத்தான் அதிக அளவில் வாய்ப்பு வலனப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழக சுற்றுலாத்துறை மூலம் உருவாகும் வேலைவாய்ப்பு 6.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால் நான்கு வருடங்களில் மட்டும் 2.5 லட்சத்திற்கும் அதிகமாக புதிய நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

தமிழக அதிமுக அரசு தற்சமயம் பல்வேறு நிதியை ஒதுக்கீடு செய்து சுற்றுலாத்துறையை வேகமாக வளப்படுத்தி வருகிறது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த மலை வாசஸ்தலமாக விளங்குகிறது. இங்கு செட்டியார் பூங்கா, தேவதை நீர்வீழ்ச்சி போன்ற இடங்களுக்கு செல்லும் அணுகு சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ரூ.4.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

முதல்வரின் நேரடி அறிவிப்பின் பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் மிக முக்கியமாக மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரினை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாக, கோக்கர்ஸ் வாக் பகுதியில் ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் செய்யப்பட்டது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளது.

CM Palanisamy s AIADMK government makes TN the No.1 state in tourism

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் இன்னொரு முக்கியமான சாதனை என்றால், அது பிரபலமாகாத தலங்களை முன்னேற்றியதுதான் என்று கூட கூறலாம். உதாரணமாக ஏலகிரி, திருக்கடையூர், வேதாரண்யம், தரங்கம்பாடி, திருமணஞ்சேரி, சித்தன்னவாசல், புளியஞ்சோலை, தாரமங்கலம், கொல்லிமலை, ஒகேனக்கல், பவானி கூடுதுறை, வால்பாறை, மேகமலை, சிறுமலை, திருப்புடைமருதூர், திற்பரப்பு போன்ற பகுதிகள் முதல்வர் பழனிசாமி ஆட்சியின் கீழ் புணரமைக்கப்ட்டது.

இது போன்ற தலங்களில் நட்சத்திர தகுதிகொண்ட தங்கும் விடுதிகள், சுற்றுலாத் தொடர்பான வசதிகள் கொண்ட பொழுதுபோக்குப் பூங்காக்கள், கம்பி வழிப்பயணம், (Rope Car) படகு குழாம் போன்ற திட்டங்களை செயல்படுத்திட ஊக்கத்தொகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு புனரமைப்பு பணிகளை செய்ய 25 லட்சம் ரூபாய் வரை தலா வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் நிதியுதவி திட்டத்தின்கீழ் தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் 47.05 கோடிக்கு புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.பழனியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முக்கிய இடங்களில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் கழிப்பிடங்கள், ரூ.34.24 லட்சம் மதிப்பீட்டில் முக்கிய இடங்களில் விளம்பர பலகைகள் மற்றும் வழி காட்டி பலகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக முதல்வரின் தலைமையின் சுற்றுலாத்துறை ஆணையரகம் மிக சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் 200 முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, சுற்றுலா தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார்கள். அதேபோல் அரசு மூலம் 14 சுற்றுலா அலுவலகங்கள் தமிழ்கத்திலும், 6 அலுவலகங்கள் பிற மாநிலத்திலும் வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுக்க 27 சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 கோடி ரூபாய் வருடம் தோறும் ஒதுக்கப்படுகிறது.

இது மட்டுமின்றி தமிழக அரசின் சுற்றுலாத் துறை தனது இணையதளம் மூலமாக விர்ச்சூவல் டூர் எனப்படும் இணைய சுற்றுலாவைத் தொடங்கி நடத்தி வருகிறது. சுற்றுலாத்துறையின் இணையதளமான www.tamilnadutourism.org என்ற தளத்தில் இதைப் பார்க்கலாம். தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய 11 சுற்றுலா இடங்கள் குறித்த புகைப்படங்களை இதில் பார்த்து ரசிக்கலாம்.

CM Palanisamy s AIADMK government makes TN the No.1 state in tourism

இந்த நிலையில் தற்போது கீழடியும் கொஞ்சம் கொஞ்சமாக பெரிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. அங்கு தமிழக அதிமுக அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை ஐந்து கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளது. 6ம் கட்ட பணிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இப்போதே அங்கு மக்கள் சுற்றிப்பார்க்க குவிந்து வருகிறார்கள். விரைவில் இங்கு வெளிநாட்டு மக்களும் அதிமுக அரசின் சீரிய முயற்சியால் வருவார்கள்.

அதேபோல் சென்னை அதிமுக அரசின் ஆட்சியின் கீழ் மருத்துவ தலைநகராக உருவெடுத்துள்ளது. தமிழக மக்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும், பிற நாட்டினர்களுக்கும் மருத்துவச் சேவை புரிவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதிமுக அரசு மருத்துவ துறை மீது தீவிரமாக கவனம் செலுத்தி வருவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

அதி நவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும், சிறந்த மருத்துவ வல்லுநர்களும், சேவைகளுக்கு சிறப்புபெற்ற தமிழக அரசு மருத்துவமனைகளும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்து மருத்துவ நலம் பேணி திரும்பச் செல்லும் பாங்குடன் அமைந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ துறை வளர்ச்சிக்காக இந்த ஆண்டு ரூ.12,563 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது மறைமுகமாக தமிழக சுற்றுலாவையும் மேம்படுத்துகிறது.

தமிழகத்திற்கு உடல்நலம் நாடி வந்து, நலமுடன் திரும்பிச் செல்லும் பயனாளிகள் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்க்கும் வகையில் வசதிகள் செய்வது அவசியமாகிறது. இதனால், நலம் நாடி வரும் பயனாளிகள் மனமகிழ்வுடன் தமிழகத்தின் பிறபகுதிகளையும் சுற்றிப்பார்க்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X