கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கொச்சி: நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் உடல் நலக்குறைவால் இன்று (செவ்வாய்கிழமை) அகால மரணம் அடைந்தார்.

2009ம் ஆண்டு நீலத்தாமரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனார்.

அந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அமலா பால் அடுத்ததாக நடித்த மைனா படம் அவருக்கு பெரும் திருப்பு முனையை தந்தது.

அமலா பால் திருமணம்

அமலா பால் திருமணம்

அதன்பிறகு ஜெயம் ரவி, அதர்வா, தனுஷ் என இளம் நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்தார். தலைவா படம் மூலம் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்தார். அந்த படத்தின் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார். சில ஆண்டுக்கு பின் விவாகரத்தும் செய்தார்.

ஆடை படம்

ஆடை படம்

அதன்பிறகு மீண்டும் திரைப்படத்தில் கவனம் செலுத்திய அமலா பால் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார். ஆடை படத்தில் நடித்தார். இப்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பால் வர்கீஷ் மரணம்

பால் வர்கீஷ் மரணம்

அமலா பாலின் சொந்த ஊர் கேரளா மாநிலம் குருப்பம்பாடி ஆகும். அவரது தந்தை பால் வர்கீஷ் கேரளாவில் உடல் நலக்குறைவால் இன்று அகால மரணம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதை கேட்டு திரை உலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரளாவில் நடக்கிறது

கேரளாவில் நடக்கிறது

அமலா பாலின் தந்தை பால் வர்கீஷின் இறுதி சடங்கு நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை சொந்த ஊரான குருப்பம்பாடியில் செயின்ட் பீட்டர் மற்றும் செயின் பால் கத்தோலிக் தேவாலயததில் நடைபெறுகிறது.

பலரும் இரங்கல்

பலரும் இரங்கல்

தந்தை மறைவை அடுத்து நடிகை அமலா பால் பெரும் சோகத்தில் உள்ளார். தென்னிந்திய திரையுலகினர் பலர் அமலா பாலுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நாளை இறுதி சடங்கில் பலர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

English summary
actress amala paul father paul varghese passed away. funeral at kuruppampadi kerala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X