கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா... இடமாற்றம் செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா பணியிடமாற்றம்

    கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவை பிஎஸ்என்எல் நிறுவனம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

    கொச்சியில் உள்ள போட் ஜெட்டி கிளையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ரெஹானா பாத்திமா. இவர் கடந்த ஆண்டு பெண்ணின் மார்பகங்கள் தர்பூசணி பழங்களை போல் இருப்பதாக கோழிக்கோடு கல்லூரி பேராசிரியர் தெரிவித்த தகவலை எதிர்த்து தர்பூசணியுடன் மேலாடையின்றி புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

    BSNL transfers Rehana Fathima

    இதனிடையே அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நுழையலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ரெஹானா பாத்திமா போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றார்.

    அப்போது பனம்பிலி நகரில் உள்ள பாத்திமாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதையடுத்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலில் இருந்து பாத்திமாவை நீக்கிவிட்டனர்.

    மேலும் பாத்திமாவை பணியிலிருந்து நீக்க வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பலரிவாட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு பேரணி சென்றனர். இந்நிலையில் பாத்திமா கொச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து பலரிவாட்டம் அலுவலகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

    English summary
    Rehana Fathima, a BSNL employee who had made an attempt to enter the Lord Ayyappa Temple in Sabarimala, has been transferred to the Palarivattom telephone exchange.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X