கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அவித்த முட்டை, வறுத்த மீன்.. வழங்கப்படும் உணவுகள் விவரம்

Google Oneindia Tamil News

கொச்சி: கொரோன அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுபவர்களுக்கு இரண்டு விதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுட்டு சிகிச்சை பெறுவோருக்கு அளிக்கப்படும் உணவுகள் குறித்து எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரானா வைரஸ் தொற்றால் கேரளாவில் 28 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு என இரண்டு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றது.

coronavirus patients foods in kerala: eggs and fish fry served to coronavirus patients

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் இந்தியர்களுக்கு காலை உணவாக தோசை, சாம்பார், 2 அவித்த முட்டை, இரண்டு ஆரஞ்சு, டீ மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் வழங்கப்படுகிறது.

அவர் சொன்னதை செய்து இருந்தால்.. கொரோனாவை தடுத்து இருக்கலாம்.. லீயிடம் மன்னிப்பு கேட்ட சீனா.. ஏன்?அவர் சொன்னதை செய்து இருந்தால்.. கொரோனாவை தடுத்து இருக்கலாம்.. லீயிடம் மன்னிப்பு கேட்ட சீனா.. ஏன்?

காலை 10.30மணிக்கு பழச்சாறு வழங்கப்படுகிறது. மதிய உணவில் சாப்பாத்தி, வறுத்த மீனுடன் கேரள உணவு வழங்கப்படுகிறது. மாலையில் டீ மற்றும் பிஸ்கட்டும், இரவு உணவாக அப்பம் , இரண்டு வாழைப்பழமும் வழங்கப்படுகிறது.

coronavirus patients foods in kerala: eggs and fish fry served to coronavirus patients

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கு 2 அவித்த முட்டை, சூப் மற்றும் பழச்சாறு காலை உணவாக வழங்கப்படுகிறது. மதியம் ரோஸ்டேடு பிரெட், சீஸ் மற்றும் பழங்களும் வழங்கப்படுகிறது. இரவில் முட்டை பொறியல். பழங்கள் வழங்கப்படுகிறது.

English summary
eggs and fish fry served to coronavirus patients in kerala, food details of coronavirus patients
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X