கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளா உள்ளாட்சி தேர்தலால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. சபரிமலைக்கு பக்தர்களை அதிகரிக்க அரசு மறுப்பு

Google Oneindia Tamil News

கொச்சி: மண்டல பூஜை நாள் வரை சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என கேரள அரசு தெரிவித்துள்ளது. மண்டல பூஜைக்கு பிறகு கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயில் தற்போது மண்டல பூஜைக்காகவும் மகரவிளக்கு திருவிழாவிற்காகவும் திறக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் போர்டே நிர்ணயிக்கிறது.

Government against increasing number of devotees till Mandala Pooja

வார நாட்களில் தினமும் 1000 பேரும், சனிக்கிழமைகளில் 2000 பேரும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3000 பேரும் வரலாம் என அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பனை இனி 5ஆயிரம் பேர் தரிசிக்கலாம் - உயர்நீதிமன்ற உத்தரவால் பக்தர்கள் மகிழ்ச்சிசபரிமலை ஐயப்பனை இனி 5ஆயிரம் பேர் தரிசிக்கலாம் - உயர்நீதிமன்ற உத்தரவால் பக்தர்கள் மகிழ்ச்சி

அப்போது கேரள அட்டர்னி ஜெனரல் கே வி சோஹன் கூறுகையில் கேரளா உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும். அதனால் பக்தர்களின் எண்ணிக்கையை மண்டல பூஜை வரை அதிகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

English summary
Kerala Government says that it wont increase the number of devotees till Mandala Pooja Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X