கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாலத்தீவில் இருந்து 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் கொச்சியில் ஐ.என்.எஸ். ஜலாஷ்வா கப்பல்

Google Oneindia Tamil News

கொச்சி: மாலத்தீவில் தத்தளித்த 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் ஐ.என்.எஸ். ஜலாஷ்வா கப்பல் இன்று கொச்சி வருகை தந்தது.

கொரோனா லாக்டவுனால் பிற நாடுகளில் தத்தளித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வந்தே பாரத் மிஷன் என்ற பெயரில் இந்த மீட்பு நடவடிக்கை வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

INS Jalashwa arrives at Kochi with 698 Indians

அமெரிக்கா, மாலத்தீவுகள், பஹ்ரைன், சிங்கப்பூர், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மாலத்தீவில் 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்கள் தத்தளித்து வந்தனர்.

இவர்கள் அனைவரையும் மீட்பதற்கான ஆபரேஷன் பெயர் சமுத்துரா சேது. இதற்காக ஜலாஷ்வா கப்பல் மாலத்தீவின் மாலே துறைமுகத்தை சென்றடைந்தது. 698 பயணிகளுடன் மாலே துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இக்கப்பல் இன்று கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தது.

இதுவரை வெளிவராத புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்.. இதுவரை வெளிவராத புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்.. "பார்ன்"டெண்டுல்கர் செய்த கியூட் டிவிட்.. செம!

கொச்சி துறைமுகத்தில் வந்திறங்கிய அனைவரையும் கை தட்டி வரவேற்றனர். அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அனைவரும் 40 கேரளா அரசு பேருந்துகள், 50 கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் பல்வேறு தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

English summary
INS Jalashwa carrying 698 Indians from Maldives arrived at Kochi port today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X