கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்

Google Oneindia Tamil News

கொச்சி: இந்திய கடற்படை கப்பல் ஜலாஷ்வா, மாலத்தீவின், மாலேவிலிருந்து கொச்சிக்கு 698 இந்தியர்களுடன் பயணத்தை இன்று நள்ளிரவு துவங்கியுள்ளது.

இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, மாலத்தீவுகள், பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக வியாழக்கிழமை தொடங்கியது, 'வந்தே பாரத் மிஷன்'. இதன் ஒரு பகுதியாக போர்க் கப்பல்களும் பயன்படுத்தப்படுகிறது.

INS Jalashwa sets sail from Maldives to Kochi with 698 Indians

"மொத்தம் 595 ஆண்களும் 103 பெண்களும் ஐ.என்.எஸ் ஜலாஷ்வாவில் பயணிக்கிறார்கள். அதில் 19 பெண்கள் கர்ப்பிணிகள்." என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக பேக்கேஜ் கிருமிநாசினி நிலையங்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் வரவேற்பு மேசைகள் அமைக்கப்பட்டன" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கப்பல் பயணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் வயது மற்றும் மருத்துவத் தேவைகளையும் முன்னுரிமை அடிப்படையில் அதிகாரிகள் பரிசீலித்தனர்.

ஏர் இந்தியா மே 7 முதல் மே 14 வரை 64 சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் இந்தியர்களை தாயகம் அழைத்து வருகிறது.

INS Jalashwa sets sail from Maldives to Kochi with 698 Indians

கொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த பிரபல மருந்து நிறுவன மேலாளர் பலி.. சென்னையில் சோகம்கொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த பிரபல மருந்து நிறுவன மேலாளர் பலி.. சென்னையில் சோகம்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் கிட்டத்தட்ட 15,000 இந்தியர்களை, வியாழக்கிழமை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு அழைத்துவர இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 12 நாடுகளில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானங்களில் இவர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, அரசாங்கம் மே 13 வரை 64 விமானங்களை இயக்கும், மூன்று கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தும். "வந்தே பாரத் மிஷன்" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 64 விமானங்களில் 15 விமானங்கள் கேரளாவுக்கும், தலா 11 விமானங்கள் தமிழகம் மற்றும் டெல்லிக்கும், தலா 7 மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவிற்கும், மீதமுள்ளவை குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கும் செல்லும்.

English summary
Indian Navy Ship Jalashwa has set sail from Male to Kochi in Kerala with 698 Indians nationals who were stranded in Maldives amid the coronavirus-triggered lockdown, senior Navy officials said. This repatriation is part of the Vande Bharat Mission that began on Thursday to bring stranded Indians home from various countries like the UK, the UAE, the US, Maldives, Bahrain and Singapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X