கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் இதயங்களை வென்ற இஸ்லாமிய மணமகள்.. மஹராக கேட்ட விஷயம் தான் ஹைலைட்டே!

Google Oneindia Tamil News

கொச்சி: கேரளாவில் புதிதாக திருமணம் ஆன முஸ்லிம் மணமகள், தன்னுடைய கணவரிடம் மஹராக ( திருமண கொடை) புத்தகங்களை கேட்டு வாங்கியதன் மூலம் சமூக வலைதளங்களில் மக்களின் இதயங்களை வென்றுள்ளார்.

பொதுவாக திருமணம் ஆகும் முஸ்லிம் பெண்கள் மஹராக (திருமண கொடை) தன்னுடைய கணவனிடம் விரும்பிதை கேட்கலாம்.

அது பணமாகவோ, நகையாகவோ, வீடாகவோ அல்லது ஏதேனும் பிடித்ததை வாங்கிக்கொள்ளலாம். மஹர் என்பத மணமகளின் உரிமை. அதை மணமகன் மறுக்க முடியாது.

புத்தகம்

புத்தகம்

கேரளாவைச் சேர்ந்த் அஞ்னா நிஜாமுக்கும் இஜாஸ் ஹக்கிமுக்கும் கடந்த அக்டோபரில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணம் பேசி முடிக்கும் போது மணமகள் அஞ்னா நிஜாம், மணமகள் இஜாஸிடம் தனக்கு 80 புத்தகங்கள் வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரும் சம்மதித்துள்ளார்.

 100 புத்தகம்

100 புத்தகம்

இந்த ஜோடிக்கு கடந்த டிசம்பர் 29ம் தேதி இனிதே திருமணம் (நிக்கா) நடந்தது. அப்போது இஜாஸ் தனது மனைவி அஞ்சாவுக்கு 80 புத்தகங்களுக்கு பதில் கூடுதலாக 20 புத்தகங்கள் சேர்த்து 100 புத்தமாக பரிசளித்துள்ளார்.பலர் இந்த ஜோடியை ஊக்கப்படுத்தி சமூக வலைதளங்களில் ஊக்கப்படுத்தி வாழ்த்தினர். மணமகனின் குடும்பத்தினர் இந்த முடிவை முழுமையாக ஆதரித்தனர்

வைரலான படம்

பைபிள், குர்ஆன், கீதை மற்றும் இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட புத்தகங்களால் சூழப்பட்ட அஜ்னா நிஜாமின் படம் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மக்களின் இதயங்களை இந்த ஜோடி வென்றுள்ளது.முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி கேரளாவில் இப்படி புத்தகம் கேட்பது இதுவே முதல் முறை அல்ல. ஏற்கனவே ஒரு மணமகள் 2016 இல் 50 புத்தகங்களை மஹராக கோரியிருந்தார்.

பொதுமக்கள் பாராட்டு

மஹராக பணமாகவோ, நகையாகவோ கேட்காமல் புத்தகங்கள் கேட்டு வாங்கிய முஸ்லிம் மணமகள் அஜ்னா தான் கேரளாவில் சமூக வலைதளங்களில் மிகப்பெரியஅளவில் வைரலாகி வருகிறார். புத்தகங்களை வாங்கி கொடுத்த இஜாஸையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த ஜோடியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த பெற்றோருக்கும் பாராட்டுக்களை பலர் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
A newly married Muslim couple in Kerala is winning hearts on social media : Kerala Muslim Bride Demands 80 Books As Mahr, now she gets 100 books
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X