கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்க

Google Oneindia Tamil News

கொச்சி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எனவே, புது ஐடியா உடன் வந்துள்ளன கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள டாக்ஸி ஓட்டுனர் அமைப்புகள்.

டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றை இயக்கும்போது, என்னதான் டிரைவர் மற்றும் பயணிகள் நடுவே இடைவெளி இருந்தாலும் கூட, தும்முவது, பேசுவது போன்றவற்றின் போது எச்சில் தெறித்து டிரைவர்கள் மீது விழ வாய்ப்பு உள்ளது.

அதே போல டிரைவர்களிடம் இருந்து பயணிகளுக்கும் எச்சில் படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ஒரு வேளை, இதில் யாருக்காவது பாதிப்பு இருந்தால் அது பிறருக்கு பரவும் நிலை ஏற்படும்.

சிறப்பு ரயில்களில் கூடுதல் பயணிகளை அனுமதிக்க முடிவு- 3 ஸ்டேசன்களில் நிற்கும்சிறப்பு ரயில்களில் கூடுதல் பயணிகளை அனுமதிக்க முடிவு- 3 ஸ்டேசன்களில் நிற்கும்

பைபர் எளிது

பைபர் எளிது

இதை தடுப்பதற்காக, பைபர் மூலம், டிரைவர் மற்றும் பயணிகளிடையே ஒரு தடுப்பு அமைக்கும் முடிவுக்கு, எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் வந்துள்ளது. ஏற்கனவே, இது போன்ற வசதிகளுடன் டாக்சிகள் இயங்க தயாராகிவிட்டன. பைபர் சுவர் அமைப்பது என்பது எளிதான பணி தான் என்கிறது எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம்.

தொடக் கூடாது

தொடக் கூடாது

மேலும், பயணிகள் கார் கதவை தொடுவதற்கு அனுமதிக்கப்படுவது கிடையாது. டிரைவர் தான் கார் கதவை திறந்து பயணிகளை உள்ளே அனுப்புவார். இறங்கும்போதும், அவர்தான் திறந்து விடுவார். பண பரிமாற்றம் நேரடியாக இருக்காது. ஆன்லைன் மூலமாக பயணிகள், டிரைவருக்கு பணத்தை செலுத்த வேண்டும்.

கிருமி நாசினி

கிருமி நாசினி

இதன் மூலம் உச்சபட்ச அளவுக்கு பாதுகாப்பு கடைபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பயணி அமர்ந்து சென்ற பிறகு ஒவ்வொரு பயணத்தின் பின்பும், கிருமி நாசினி கொண்டு கார் சுத்தம் செய்யப்படும். மேலும், காரில் ஏசி வசதி செய்யப்பட்டு இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.

Recommended Video

    அவசர காலத்தில் பயன்படுத்த ரெம்டெசிவர் மருந்துக்கு இந்தியா ஒப்புதல்
    ஏசி கிடையாது

    ஏசி கிடையாது

    கார் ஜன்னல்கள் திறந்தபடி இருக்கும். பைபர் கண்ணாடி கிடைக்காதபட்சத்தில் பிளாஸ்டிக் சீட்டுகள் மூலமாக பயணிகள் மற்றும் டிரைவர்கள் இடையேயான பகுதி பிரிக்கப்படுகிறது. எர்ணாகுளம் மாவட்டம் பசுமை மண்டலத்தில் உள்ளது. எனவே விரைவில் அங்கே டாக்சி சேவை மறுபடி துவங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில்தான் புது ஐடியா உடன் களமிறங்கியுள்ளனர் டாக்ஸி ஓட்டுனர்கள். வருங்காலத்தில் நாட்டின் பிற பகுதிகளிலும் இது போன்ற நடைமுறைகள், எல்லா இடமும் அமலுக்கு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    English summary
    Kochi:A pvt taxi firm has installed transparent partitions b/w driver & passenger seats in its cabs to prevent spread of COVID19,after suggestions from Ernakulam Dist. administration. The firm's taxis are deployed for transportation of those returning by repatriation flights,ships.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X