கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலைக்குச் சென்ற ரெஹனா பாத்திமாவின் வீடு சூறை..!

Google Oneindia Tamil News

கொச்சி: சபரிமலைக்கு இருமுடி கட்டிச் சென்று சன்னிதானத்தை நெருங்கியும் கூட கடும் எதிர்ப்பால் உள்ளே போக முடியாமல் திரும்பிய கொச்சியைச் சேர்ந்த ரெஹனா பாத்திமாவின் வீட்டை இந்து அமைப்பினர் சூறையாடியுள்ளனர். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ரெஹனா பாத்திமா கூறியுள்ளார்.

Rahana Fatimas house ransacked

கொச்சியைச் சேர்ந்த ரெஹனா பாத்திமா, இந்துவாக இருந்து முஸ்லீமாக மாறியவர். இவர் இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்தார். அவருக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து சன்னிதானம் அருகே வரை அழைத்து வந்தனர். அவருடன் ஆந்திராவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதாவும் சபரிமலைக்கு வந்தார். இதனால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. பக்தர்கள், தந்திரிகள் போராட்டத்தில் குதித்ததால் இருவரையும் சன்னிதானத்திற்குள் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.

நீண்ட போராட்டத்தையடுத்து இருவரும் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் ரெஹனாவின் வீட்டை இந்து அமைப்பினர் சூறையாடியுள்ளனர். இதனால் கேரளாவில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. ரெஹனாவின் வீட்டுக்குள் புகுந்த அக்கும்பல் வீட்டை அடித்து நொறுக்கியது. பொருட்களை சூறையாடி வெளியே போட்டுள்ளனர். உடற்பயிற்சி செய்யும் கருவியையும் விடவில்லை.

[சபரிமலை விவகாரத்தில் அசம்பாவிதம்.. கேரளா, தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு உள்துறை எச்சரிக்கை]

சபரிமலையிலிருந்து பம்பைக்கு போலீஸ் பாதுகாப்புடன் திரும்பிய ரெஹனா இதுகுறித்துக் கூறுகையில்,

எனது குழந்தைகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது. போலீஸார் பாதுகாப்பு தருவதாக கூறியுள்ளனர். எனவே வீடு செல்ல முடிலவு செய்துள்ளேன்.

பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்க்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட சிலர்தான் பிரச்சினை செய்கின்றனர். ஒருவர் பக்தராக போவதில் என்ன தடை இருக்க முடியும். நான் பக்தராகத்தான் போக வந்தேன். ஆனால் என்னைத் தடுப்பது ஏன் என்று ரெஹனா கூறியுள்ளார்.

English summary
The house of woman activist Rehana Fatima in Kochi was vandalised by unidentified miscreants earlier today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X