• search
கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

இதுக்குப் பேர்தான் சோசியல் அப்ரோச்சா.. இன்ஸ்டாகிராம் காதலன்..டிக்டாக் காதலி..உதவிய பேஸ்புக் பிரண்ட்!

|

கொச்சின்: சோசியல் மீடியாவில் பழகி நட்பு காதலாகி அந்த காதலுடன் கை கோர்க்க வீட்டை விட்டு போவது அதிகரித்து வருகிறது. கேரளாவில் டிக்டாக் மூலம் பிரபலமான இளம் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பையன் மேல் காதல் ஏற்படவே சில மாதங்களே பழகிய பையனை பார்க்க வீட்டுக்கு கூட தெரியாமல் விமானம் ஏற ஏர்போர்ட் வரை போயிருக்கிறார். இந்த காதலுக்கு ஃபேஸ்புக் மூலம் பழகிய ஆட்டோ டிரைவர் உதவியிருக்கிறார் என்பதுதான் சுவாரஸ்யம்.

சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை டிக்டாக்கில் ஆடியும் பாடியும் பேசியும் பிரபலமாகி வருகின்றன. திரை உலக பிரபலங்களை அதிக பிரபலமாக இருக்கின்றனர் இந்த டிக் டாக் பல ரசிகர்களை சம்பாதித்துக்கொடுத்துள்ளது. இப்படித்தான் கேரளா மாநிலம் மூவட்டுப்புழாவைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி டிக்டாக் மூலம் ரொம்ப பிரபலமானார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பெங்களூரு பையனுடன் நட்பு ஏற்பட்டது. அந்த பையனுக்கும் 18 வயதுதான் கல்லூரியில் முதல் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்துக்கொண்டிருக்கிறார்.

சில மாதங்கள் மட்டுமே பழகிய சமூக வலைத்தள காதலர்கள் நேரில் சந்திக்க ஆசைப்பட்டனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். இருவருமே 18 வயதாகும் வரை காத்திருந்தனர். அதற்கான நேரமும் கூடி வந்தது. தன்னுடைய ஆசையை அந்த பையனிடம் கூறியிருக்கிறார் அந்த பெண். பையனுக்கு அதில் ரொம்பவே ஆர்வமில்லை எப்படி சந்திப்பது கொரோனா வைரஸ் லாக் டவுன் தடையாக நிற்கிறதே திருமணம் செய்வது இப்போது சாத்தியமில்லை என்று கூறி தட்டிக்கழித்தான். என்னால் வரமுடியாது நீ பெங்களூருவுக்கு முடிந்தால் வா என்று சொன்னான்.

டிக்டாக் பிரபலம்

டிக்டாக் பிரபலம்

டிக்டாக் பெண்ணுக்கு திருமணம் செய்து கொள்ள பெங்களூரு போக ஆசைதான். பேருந்து வசதியில்லை, ரயில் போக்குவரத்து எதுவும் இல்லையே என்று யோசித்த அந்த பெண்ணுக்கு விமானத்தில் போனால் என்ன என்று தோன்றியது. கொச்சின் ஏர்ப்போர்ட் வரை எப்படி போவது என்று நினைத்து தனது நிலையை ஃபேஸ்புக் நண்பரிடம் ஷேர் செய்தாள் அந்த பெண்.

பேஸ்புக் நண்பன்

பேஸ்புக் நண்பன்

கவலைப்படாதே நான் உதவுகிறேன் என்று சொல்லி தனது ஆட்டோ ரிக்ஷாவிலேயே கொச்சின் ஏர்போர்ட் வரை தனது தோழியை அழைத்துக்கொண்டு போனார் அந்த பேஸ்புக் நண்பர். இது எதுவும் அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரியாது. மகளை காணலேயே எங்கே போனாலோ என்று கதறிய பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். பெண்ணின் புகைப்படம் போலீஸ் குரூப்பில் பரவியது. ஏர்போர்ட் வாசலில் ஆட்டோவில் இருந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

மடக்கிய போலீஸ்

மடக்கிய போலீஸ்

மூவட்டுபுழா போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துப்போய் பெண்ணின் பெற்றோரிடம் அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் தன்னுடைய பெற்றோருடன் போக விரும்பவில்லை அந்த பேதைப்பெண். காதலனை பார்த்தே ஆகவேண்டும் என்று கூறி அடம்பிடித்தாள். என்ன செய்வது என்று யோசித்த போலீஸ்க்கு திடீர் ஐடியா வந்தது. அந்த பையனின் நம்பருக்கு செல்போனில் பேசி ஸ்பீக்கரில் போட்டு அந்த பெண்ணை கேட்க வைத்தனர்.

தப்பிய பெண்

தப்பிய பெண்

அந்த பெண் யாரென்று தனக்கு தெரியாது என்று எஸ்கேப் ஆகிவிட்டான் இன்ஸ்டாகிராம் காதலன். வேறென்ன செய்யமுடியும் ஏதோ நல்ல காலம் தப்பித்து விட்டோம் என்று நினைத்த அந்த பெண் பெற்றோருடன் வீட்டுக்கு கிளம்பி போய்விட்டாள். அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் மூவட்டுப்புழா போலீசார்.

  5 Chinese Apps that widely used by Indians
  விழிப்புணர்வு அவசியம்

  விழிப்புணர்வு அவசியம்

  சமூக வலைத்தளங்களில் சில நாட்கள் மட்டுமே பழகிய நட்பை காதலென்று நம்பி ஏமாறுபவர்கள் இப்போது அதிகரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு இருந்தாலும் அதையும் மீறி விமானத்தில் போயாவது சந்தித்து விடவேண்டும் என்று நினைத்திருக்கிறார் அந்த பெண்.
  சில நாள் பழகியவனுக்காக பெற்றோரை தூக்கிய எறிய நினைத்த பெண் இப்போதுதான் பெற்றோரின் அருமையை உணர்ந்திருப்பார்.

  English summary
  A TikTok Girl from Kerala Wanted to meet her instagram lover Bengaluru in Karnataka with help facebook friend Auto driver police catch near Airport.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X