கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில்

Google Oneindia Tamil News

Recommended Video

    100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. வீடியோ

    கோவை: கோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்ட 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் 9.5 கிலோ எடை கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.

    வருகின்ற சனிக்கிழமை நாடு முழுவதும் குடியரசு தின விழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டு, அதில் 9.5 கிலோ எடையுள்ள தேசியகொடியை இன்று பறக்க விட்டனர்.

    100 feet tall pole 9.5 kg weight national flag in coimbatore railway station

    சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 ரயில் நிலையங்களில் மட்டும் இவ்வாறு 100 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையுடன் கூடிய தேசியக் கொடி இன்று பறக்கவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    தென்னகத்தில் மட்டும் 8 இடங்களை மத்திய ரயில்வே துறை தேர்வு செய்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பம் சுமார் 2 டன் எடைக் கொண்டது, மதிப்பு 13 லட்சம் ரூபாய். ரயில் நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட இந்தக் கம்பத்தில் 30 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட தேசியக் கொடி 9.5 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்டு இன்று கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டு உள்ளது.

    100 feet tall pole 9.5 kg weight national flag in coimbatore railway station

    தேசியக் கொடியை பறக்கவிடும் நிகழ்வில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    English summary
    The 100 feet tall flag of the national park was 9.5 kg in the train station.Salem Railway Divisional Manager Subbarao brought the National flag
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X