கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பைக் மீது லாரி மோதல்.. இரு பெண்கள் பலி.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்.. அவிநாசி அருகே

Google Oneindia Tamil News

Recommended Video

    பைக் மீது லாரி மோதல்.. இரு பெண்கள் பலி.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் - வீடியோ

    கோவை: அவிநாசியை அடுத்து நம்பியம்பாளையம் அருகே மொபெட்டில் சென்ற இரண்டு பெண்கள் மீது லாரி மோதியதில் அவர்கள் பலியாகிவிட்டனர்.

    அவிநாசியை அடுத்து ஆதாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவமணி (48). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவரது கணவர் முத்துச்சாமி சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். சிவமணியுடன் அதே பகுதியைச் சேர்ந்த கனகமணி (40) என்பவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கோவையில் பாக்ஸிங் ஆசிரியர் கைது 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கோவையில் பாக்ஸிங் ஆசிரியர் கைது

    நம்பியம்பாளையம்

    நம்பியம்பாளையம்

    இந்நிலையில் அவிநாசியை அடுத்து கருவலூரில் உள்ள தங்களது பனியன் நிறுவன உரிமையாளரின் வீட்டிற்கு சிவமணி மற்றும் கனகமணி இருவரும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவிநாசியை அடுத்த நம்பியம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    லாரி மோதியது

    லாரி மோதியது

    அப்போது அவிநாசியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி அவர்களை முந்திச் செல்ல முயன்றது. இதில் மொபெட் மீது லாரி மோதியதில் இருவரும் நிலைத் தடுமாறி விழுந்தனர்.

    கண்காணிப்பு கேமரா

    கண்காணிப்பு கேமரா

    இதில் லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த அப்பகுதியில் இருந்த ஹரர்டுவேர்ட்ஸ் கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

    அவிநாசி போலீஸ்

    அவிநாசி போலீஸ்

    விபத்துக் காட்சிகள் பார்ப்போர் மனதை கலங்கச் செய்வதாக இருந்தது. இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Lorry in Avinashi hits two wheeler, 2 ladies died as they trapped in Lorry tyres.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X