கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி - வீடியோ

    அவிநாசி: கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி அருகே கேரள அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி இன்று அதிகாலை பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பெங்களூருவில் இருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு கேரள மாநில அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து 49 பயணிகளுடன் நேற்று இரவு சென்றது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    20 passengers killed in Bus accident near Coimbatore

    அப்போது கேரள மாநில அரசு பேருந்து மீது எதிர்வழியில் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி மோதியது. இதில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 16 பேர் (3 பெண்கள் உள்பட) சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி பலியாகினர். மற்ற அனைத்து பயணிகளும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    20 passengers killed in Bus accident near Coimbatore

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த காவல் மற்றும் தீயணைப்பு படையினர், பொதுமக்களின் உதவியுடன் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களில் மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    English summary
    20 passengers of a Kerala State Road Transport Corporation bus killed in accident near Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X