கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவையில் பிடிபட்ட வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் வீடியோ | Rare white cobra

    சென்னை: கோவை அருகே பள்ளத்தில் சிக்கிய வெள்ளை நாகப்பாம்பு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது.

    கொடிய விஷம் உடைய பாம்பு வகைகளில் ஒன்று நாகப்பாம்பு. இதனை நல்ல பாம்பு என்றும் மக்கள் அழைப்பர். இந்த நல்ல பாம்புக்கும், மனிதர்களுக்கும் நிறைய செண்டிமெண்ட் உண்டு. அதன் காரணமாக பாம்பை தெய்வமாக வழிபடுவது நம்மூர் வழக்கம்.

    இதனால் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் பாம்புக் கோவில்கள் இருப்பதை காண முடியும். மேலும் பாம்பு பற்றிய கதைகளும் இங்கு ஏராளம். நூறு வருடங்களுக்கு மேல் உயிருடன் வாழும் நல்லப் பாம்பு, ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாணிக்க கற்களை வெளியில் கக்கும் என்றும் அந்த கல்லின் வெளிச்சத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் கட்டுக்கதைகள் உள்ளன.

    3 foot long white cobra rescued near coimbatore

    அதேபோல் நாகங்களிலேயே அபூர்வமானது வெள்ளை நாகங்கள் என்பதும் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் சேதி. ஆனால் வெள்ளை நாகங்களை பொதுவாக யாரும் நேரில் பார்த்ததில்லை.

    இந்நிலையில் கோவை அருகே உள்ள எடையார்பாளையத்தில் வெள்ளை நாகம் ஒன்று ஒரு பள்ளத்தில் தவறுதலாக விழுந்துவிட்டது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு இரும்பு கம்பியின் துணையுடன் அந்த வெள்ளை நாகத்தை பள்ளத்தில் இருந்து தூக்கில் தரையில் விட்டார்.

    பைக்கில் பார்த்து போங்கப்பா.. எச்சரித்த 2 பேரை.. அரிவாளாலேயே வெட்டி சாய்த்த 7 பேர்!பைக்கில் பார்த்து போங்கப்பா.. எச்சரித்த 2 பேரை.. அரிவாளாலேயே வெட்டி சாய்த்த 7 பேர்!

    மேலும் அதன் வாலைப் பிடித்து சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டிவிட்டு பின்னர் காட்டுப் பகுதியில் விட்டுவிட்டார். இந்த புகைப்படங்கள் டிவிட்டரில் பதிவிடப்பட்டு வைரலாகியுள்ளது. வெள்ளை நாகத்தை பார்த்து, ஏராளமானனோர் வியந்து போய்யுள்ளனர்.

    English summary
    In Edayarpalayam near Coimbatore, Tamilnadu a white coloured cobra which was about 3 foot long was rescued by a man.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X