கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோழியின் பிறந்தநாளை கொண்டாடுங்க.. அதுக்காக விபரீதமாக கொண்டாடுவதா?.. அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் ஒரு மேம்பாலத்தில் நள்ளிரவில் நெருப்பு விளக்குகளை பறக்க விட்டு தோழியின் பிறந்தநாளை இளைஞர்கள் சிலர் விபரீதமாக கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் வடகோவை மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மிகக் குறைவாக இருக்கும். அப்போது நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் 3 இளைஞர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

பாலித்தீன் கவர்

பாலித்தீன் கவர்

அந்த பெண்ணுக்கு பிறந்தநாளாம். இதனால் அவர்கள் கொண்டு வந்த சிறிய அளவிலான லாந்தர் விளக்கை பற்ற வைத்தனர். பின்னர் அதற்காக வடிவமைத்த பாலித்தீன் கவரில் இணைத்து பறக்கவிட்டனர்.

பரபரப்பு

பரபரப்பு

ஆனால் அந்த விளக்கோ உயரே பறக்காமல் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லும் சாலையோரத்தில் விழுந்தது. அங்கு குடியிருப்புகள், மரங்கள் உள்ள நிலையில் நெருப்புடன் கூடிய விளக்கை பறக்க விட்டு இளைஞர்கள் பிறந்தநாளை கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய விபத்து

பெரிய விபத்து

ஒரு வேளை காற்றின் வேகம் காரணமாக லாந்தர் விளக்கு அங்குள்ள குடிசை மீதோ அல்லது மரங்களின் மீதோ விழுந்திருந்தால் என்ன ஆவது. இல்லை பாலத்தின் கீழே விழுந்தபோது வாகனத்தில் செல்பவர்கள் மீது விழுந்திருந்தால் எத்தனை பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக யார் செய்த புண்ணியமோ விபத்து ஏதும் ஏற்படவில்லை.

உணரவில்லையே

உணரவில்லையே

இளம் கன்று பயமறியாது என்பது பழமொழி. அதற்காக பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி தங்கள் பிறந்தநாளை கொண்டாடுவதா. அந்த மேம்பாலம் ஆள் நடமாட்டம் இல்லாதது என கூறப்படுகிறது. அதுவும் நள்ளிரவு நேரம் அந்த பெண்ணாவது தனது பாதுகாப்பு குறித்து உணர்ந்திருக்கலாமே. 4 அல்லது 5 பேர் குடித்துவிட்டு அந்த பெண்ணை முற்றுகையிட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை கூட அறியாமல் பெண்கள் உள்ளதை நினைக்கும் போது வேதனையை ஏற்படுத்துகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

English summary
College students celebrated their girl friend's birthday party in Coimbatore overbridge by lighting lamps and make them fly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X